வாசனுக்காக காங்கிரசில் காத்திருக்கும் மிகப் பெரிய பதவி
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த பிறகு அகில இந்திய அளவில் பெரிய பதவி ஒன்றுதமாகா தலைவர் ஜி.கே. வாசனுக்குத் தரப்படும் என்று தெரிகிறது.
இதுதொடர்பான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை டெல்லியில் சோனியா காந்திக்கும், வாசனுக்கும் இடையேவிரைவில் நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் விரைவில் தமாகா ஐக்கியமாகவுள்ளது. அதுதொடர்பான நடவடிக்கைகள் தமாகாவட்டாரத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தினசரி கூட்டங்கள், ஆலோசனைகள் என வாசன் தீவிரமாகஈடுபட்டுள்ளார்.
ஒவ்வொரு பிரிவு தலைவரிடமும் அவர் நேரடியாகவே ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரசில் சேர்ந்த பிறகு,தமாகா தலைவர்களுக்கு என்ன அந்தஸ்து கிடைக்கும், என்ன பதவி கேட்கலாம் ஆகியவை குறித்து இரண்டாம்கட்டத் தலைவர்களுடன் வாசன் ஆலோசனை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் காங்கிரசுடன் இணைந்த பிறகு வாசனுக்கு என்ன பதவி கிடைக்கும் என்பது குறித்து பெரும்எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரசைப் பொறுத்தவரை இளங்கோவனின் தலைமை மீது கட்சி மேலிடம் பெரும் நம்பிக்கையுடன்உள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு நல்லதொரு தலைவர் தமிழக காங்கிரசிற்குக் கிடைத்திருப்பதாக டெல்லிவட்டாரத்தில் கருத்து உள்ளது.
இதன் காரணமாகவே, இளங்கோவனுக்கு எதிராக எத்தனை முறை காவடி எடுத்தாலும், அதிருப்தியாளர்களைக்கட்சி மேலிடம் கண்டு கொள்ளாமலேயே உள்ளது.
மேலும், வாசனுக்கு முன்பே கட்சியில் சேர்ந்து விட்ட வாழப்பாடி ராமமூர்த்தி, குமரி அனந்தன் என பெரியதலைவர்கள் எல்லாம் பதவியில்லாமல் இருக்கும்போது வாசனுக்கு மட்டும் தமிழக காங்கிரசில் பெரிய பதவிகொடுத்தால் அது அதிருப்தியாளர்களுக்கு சாதகமாகப் போய் விடும் என்று காங்கிரஸ் வட்டாரம் கருதுகிறது.
எனவே வாசனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவேஉள்ளது. இதனால் வாசனுக்கு அகில இந்திய அளவில் பெரிய பதவி ஒன்று தரப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தந்தை மூப்பனார் போலவே அகில இந்திய அளவில் கட்சிப் பணியாற்றும் வாய்ப்பு வாசனுக்கு கிடைக்கும் என்றுதெரிகிறது. பொதுச் செயலாளர் அல்லது இளைஞர் அணி செயலாளர் போன்ற பதவிகள் வாசனுக்குகொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்லும் வாசனிடம், சோனியா காந்தி பேசுவார் என்றுதமாகா வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமாகா இணைப்பு குறித்தும் சோனியாவுடன் இறுதிக் கட்டபேச்சுவார்த்தையை நாளை நடத்தவுள்ளார் வாசன்.
பின்னர் இணைப்பு தொடர்பான முறையான அறிவிப்பு செவ்வாய்க்கிழமையே கூட வெளியாகும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கும்பகோணத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த வாசன், வரும் 15ம் தேதி ராஜ்ய சபா எம்.பியாகதான் பதவியேற்கப் போவதாகவும் அதன் பின்னரே இறுதி முடிவை அறிவிக்கப் போவதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications