உள்ளாட்சி இடைத் தேர்தல்: வெற்றி மழையில் நனையும் அதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் நேற்று (திங்கள்கிழமை) நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக பெருவாரியானஇடங்களை வென்றுள்ளது.
நேற்றைய தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று பகல் 1 மணி நிலவரப்படி 13 டவுண் பஞ்சாயத்துக்களில் வெளியான முடிவுகளின்படி, அதிமுகவுக்கு 7இடங்களும், திமுகவுக்கு 3 இடங்களும், மதிமுகவுக்கு ஒரு இடமும், சுயேச்சைகளுக்கு 2 இடங்களும்கிடைத்துள்ளன.
4 யூனியன் வார்டுகளில் 3 இடங்களை அதிமுகவும், ஒரு இடத்தை பாமகவும் கைப்பற்றியுள்ளன.
நேற்று மொத்தம் 145 பதவிகளுக்காக நடந்த தேர்தலில் 428 பேர் போட்டியிட்டனர்.
சென்னையில் அதிமுகவினர் அராஜகத்துடன் கள்ள ஓட்டுப் போட்டதாகக் கூறப்படும் 16 மற்றும் 99வதுவார்டுகளில், இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அந்தக் கட்சியே முன்னணியில் உள்ளது.












Click it and Unblock the Notifications