திமுக எம்.எல்.ஏவை அடிக்க முயன்ற அதிமுகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று ஏற்பட்ட கடும் அமளியின்போது திமுக எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தைஅதிமுக எம்.எல்.ஏக்கள் அடிக்க முயன்றனர்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் அராஜகம் செய்ததைக் கண்டித்து இன்று சட்டசபை திமுக தலைவர்அன்பழகனும், துணைத் தலைவர் துரைமுருகனும் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

ஆனால், திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேறாமல் அங்கேயே நின்று கொண்டு அதிமுக அரசைக் கண்டித்து கோஷம்எழுப்பினர். அப்போது பேசிய சபாநாயகர் காளிமுத்து, உங்கள் தலைவர்களே வெளிநடப்பு செய்த பிறகு நீங்கள்ஏன் இன்னும் இங்கேயே நிற்கிறீர்கள்? இதிலிருந்தே உங்கள் கட்சி எவ்வளவு கட்டுக் கோப்பானது என்றுதெரிகிறது என்றார்.

இதனால் மேலும் கோபமடைந்த திமுக எம்.எல்.ஏக்கள் சபையின் மையப் பகுதிக்கு விரைந்தனர். அங்கே சென்றுதரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராகவும், தேர்தலில் அதிமுகவினர் முறைகேடுகள்செய்தததைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் பதிலுக்கு கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பெரும் கூச்சல் குழப்பம்நிலவியது.

இந் நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீரென திமுகவினர் அமர்ந்து இருந்த பகுதிக்கு வேகமாகப் பாய்ந்துவந்தனர்.

வந்த வேகத்திலேயே "வெளியே போங்க, வெளியே போங்க" என்று அவர்கள் திமுக எம்.எல்.ஏக்களை விரட்டஆரம்பித்தனர். இதனால் மேலும் கடுப்பாகிப் போன திமுகவினர், முதல்வரைப் பற்றி ஏதோ சொல்லவே, அதிமுகஎம்.எல்.ஏக்கள் ஆவேசமடைந்தனர்.

அதிமுக எம்.எல்.ஏவான சேகர் பாபு கடைசி வரிசையிலிருந்து பாய்ந்து வேகமாக ஓடி வந்தார். அமைச்சர்ஜெயக்குமாரும் திமுக எம்.எல்.ஏக்களைப் பார்த்து விரலை நீட்டி ஏதோ கடுமையாகப் பேசினார். இதையடுத்துஅவையில் பெரும் அமளி ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜும் வேகமாக ஓடி வந்து மேஜையைத் தட்டி ஆவேசமாக ஏதோ கூறினார்.இதைக் கடுமையாக ஆட்சேபித்த முன்னாள் திமுக அமைச்சர் பன்னீர்செல்வம், பதிலுக்கு ஏதோ பேசினார்.

இரு தரப்பினரும் ஒருமையில் திட்டிக் கொண்டனர். ஏக வசனத்தில் இருவரும் பேசிக் கொணடனர்.

இதையடுத்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் செல்வராஜ், சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகஉறுப்பினர் ராஜாங்கம் ஆகியோரும் சபையின் மையப் பகுதிக்கு கோபத்துடன் ஓடி வந்தனர்.

வேகமாக நெருங்கி வந்த சண்முகம், தன் கையை ஓங்கியவாறே பன்னீர்செல்வத்தை அடிக்கப் பாய்ந்தார். ஆனால்ஜெயராமனும் செல்வராஜும் சேர்ந்து அவரைத் தடுத்தனர். அவர் திமிரிக் கொண்டு அடிக்க வந்தார். அவரை பிறஅதிமுகவினர் வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர்.

இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்களும் ஆவேசமடைந்தனர். அடிங்க பார்க்கலாம் என்று கூறிக் கொண்ட சில திமுகவினர் அதிமுகவிரை நோக்கி முன்னேறினர். இதனால் அடிதடி ஏற்படும்சூழ்நிலைஏற்பட்டது. ஆனால், இரு தரப்பிலும் சில மூத்த எம்.எல்.ஏக்கள் சுதாரித்துக் கொண்டு தங்கள் தரப்பினரைஅமைதிப்படுத்தினர்.

ஆனாலும், தொடர்ந்து இரு தரப்பினரும் கைகளை நீட்டி ஆவேசமாக ஏதேதோ கத்திக் கொண்டே இருந்தனர்.

சுமார் 15 நிமிடங்கள் ஆவேசமாக கத்திய பிறகே, திமுக எம்.எல்.ஏக்கள் சபையை விட்டு வெளியேறினர். அதன்பிறகு அமைச்சர் பொன்னையன் பேச ஆரம்பித்தார்.

ஜெயலலிதாவின் வெற்றியைக் கண்டு ஜீரணிக்க முடியாத கோழைகள், மக்கள் சக்தி தங்களிடம்தான் இருக்கிறதுஎன்று காட்டுவதற்காக இங்கே இந்த நாடகத்தை நடத்தியுள்ளனர் என்று வசனம் பேசினார்.

சபைக்கு வெளியே உள்ள லாபியில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த திமுக எம்.எல்.ஏக்கள் உடனே"ஜெயலலிதா ஒழிக" என்று கோஷம் எழுப்பினர். உடனே அதிமுக எம்.எல்.ஏக்கள் பதிலுக்கு "போங்கடா வெளியே"என்று சத்தம் போட்டனர்.

நீங்க வாங்கடா வெளியே என்று திமுகவினரும் கோஷமிட்டனர்.

அன்பழகன் அனைவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.

சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்த இந்த அமளியின்போது, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையினுள் இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+