உள்ளாட்சி இடைத் தேர்தல் .. 63 சதவீத வாக்குகள் பதிவு
சென்னை:
தமிழகத்தில் நேற்று (திங்கள்கிழமை) நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் சென்னை மாநகராட்சியின் 2 வார்டுகள், மதுரை மாவட்டத்தில் 3 தலித் பஞ்சாயத்துக்களுக்கானதலைவர் காலியிடம் உள்ளிட்ட 145 காலியிடங்களுக்கு திங்கள்கிழமை இடைத் தேர்தல் நடந்தது.
சென்னையில் லேசான சலசலப்புடனும், மதுரை தலித் பஞ்சாயத்துக்களில் மந்தமான வாக்குப்பதிவுடனும் நடந்தஇந்தத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெவித்துள்ளது.
வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, பிற்பகல் வாக்கில் முடிவுகள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் தேர்தலைப் புறக்கணித்த மக்கள்:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பஞ்சாயத்திற்கு நடந்த தேர்தலில் 2 வார்டுகளைச் சேர்ந்த வாக்காளர்கள்தேர்தலைப் புறக்கணித்தனர்.
வல்லநாடு பஞ்சாயத்திற்குட்பட்டது கோணார் குளம். இந்தப் பகுதியில் 2 வார்டுகள் உள்ளன. கடந்த அக்டோபர்மாதம் நடந்த தேர்தலின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக இந்தப் பகுதி வாக்காளர்கள் புகார் கூறினர்.
தேர்தலில் முறைகேடுகள் செய்தும் கூட ஆளுங்கட்சி வேட்பாளர்கள் இங்கு வெற்றி பெறவில்லை என்பதால் அங்குமறு தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் மறு தேர்தல் நடத்தக் கூடாது என்று கோணார் குளம் வாக்காளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இருப்பினும்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த இடைத் தேர்தலில் கோணார் குளம் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் யாரும் ஓட்டுப்போடவில்லை. இதனால் மாலை வரை காத்திருந்த தேர்தல் அதிகாகள் வெறும் வாக்குப் பெட்டியுடன் திரும்பிச்சென்றனர்.












Click it and Unblock the Notifications