இந்தியா- சிங்கப்பூர் இடையே கடலுக்கு அடியில் கேபிள்
சிங்கப்பூர்:
சென்னை- சிங்கப்பூர் இடையே 3,200 கி.மீ. நீளத்துக்கு கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள ஆப்டிகல் பைபர்தொலைத் தொடர்பு கேபிள் இணைப்பை பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைத்தார்.
சென்னைக்கும் சிங்கப்பூரில் உள்ள துவாஸ் நகருக்கும் இடையே இந்தக் கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 1,150கோடி செலவில் இந்த கேபிள் கடலின் அடியில் புதைக்கப்பட்டது.
இதன் மூலம் பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களும் இன்டர்லிங்க் செய்யப்பட்டுள்ளன.
செயற்கைக் கோளின் உதவி இல்லாமல் அதிக பாண்ட்விட்த் கொண்ட டேட்டாக்களை அனுப்பவும், தொலைபேசி,இண்டர்நெட் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு வசதிக்கும் இந்தக் கேபிளை பயன்படுத்த முடியும்.
இந்த கேபிள் மூலமான முதல் தொலைபேசி சேவையை பிரதமர் வாஜ்பாய் சிங்கப்பூரில் துவக்கி வைத்தார்.சிங்கப்பூரில் இருந்து நேற்று மாலை தமிழக கவர்னர் ராம்மோகன் ராவை அவர் தொலைபேசியில் அழைத்துப்பேசினார்.
பின்னர் சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டொங்கும் ராம்மோகன் ராவுடன் பேசினர். தமிழக மக்களுக்கு தனதுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தீவிரவாதம்:
இன்று 2002ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் பேருரை ஆற்றிய பிரதமர் வாஜ்பாய், தீவிரவாதத்தை எதிர்க்க இந்தியாஉள்ளிட்ட அனைத்து ஆசிய பசிபிக் நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூரிலும் இஸ்லாமிய தீவிரவாதம் ஊடுருவ ஆரம்பித்துள்ளது. ஜெமா இஸ்லாமியா என்ற அடிப்படைவாதஅமைப்பு இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதுசிங்கப்பூரிலும் ஊடுருவ ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications