20 அடி ஆழ குழிக்குள் விழுந்த பெண் குழந்தை பலி

Subscribe to Oneindia Tamil

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்றுக்காகத் தோண்டப்பட்ட 400 அடி குழிக்குள் 20 அடிஆழத்தில் சிக்கிய 2 வயதுப் பெண் குழந்தை மீட்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதூர் மலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செட்டிக்குமார்-பிரியாதம்பதிகளின் ஒரே மகள் சுபாஷிணி.

ஆழ்குழாய் கிணற்றுக்காக 400 அடி ஆழத்திற்கு தன்னுடைய தோட்டத்தில் ஒரு குழி தோண்டினார் செட்டிக்குமார்.ஆனால் தண்ணீர் வராததால் அந்தக் குழியின் மேற்பகுதியை சாக்கினால் கட்டி மூடிவிட்டார் அவர்.

இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) மாலை 4 மணியளவில் தத்தித் தத்தி நடந்து வந்து கொண்டிருந்த குழந்தைசுபாஷிணி, அந்தச் சாக்கில் காலை வைத்தாள்.

உடனே கழன்று கொண்ட அந்தச் சாக்கு குழிக்குள் விழவே, சுபாஷிணியும் அலறலுடன் குழிக்குள்ளே விழுந்துவிட்டாள்.

குழந்தையின் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த பிரியா, சுபாஷிணி குழிக்குள் விழுந்து விட்டாள் என்று தெரிந்ததும்அலறித் துடித்தார். அவர் அழுகுரலைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

விஷயம் காட்டுத் தீ போலப் பரவி தீயணைப்புப் படையினருக்கும் தகவல் போனது. விரைந்து வந்த அவர்கள்மளமளவென்று செயலில் இறங்கினர்.

அந்தக் குழிக்கு அருகிலேயே மற்றொரு பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும் இந்தப்பள்ளத்தை ஒருபுறம் தோண்டிக் கொண்டிருக்க, மறு பக்கம் சுபாஷிணிக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது.

சுமார் 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மயங்கிய நிலையில் சுபாஷிணி மீட்கப்பட்டாள். அங்கு ஏற்கனவேவந்திருந்த மருத்துவக் குழுவினர் அவளுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் சுபாஷிணி உயிரிழந்தாள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+