தலித் பஞ்சாயத்துக்களில் மக்கள் வேட்பாளர்கள் வெற்றி
மதுரை:
தலித் பஞ்சாயத்து தொகுதிகளான பாப்பாபட்டி மற்றும் கீரிப்பட்டி ஆகிய 2 தொகுதிகளிலும் மக்கள் சார்பிலேயேநிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் 9 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டும் யாருமே வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால்அங்கு பல ஆண்டுகளாகத் தேர்தலே நடைபெறவில்லை.
இந்நிலையில் ஒருவழியாக நேற்று (திங்கள்கிழமை) பாப்பாபட்டியிலும் கீரிப்பட்டியிலும் தேர்தல் நடந்தது. மக்கள்அனைவரும் வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்த இரு தலித் தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பாப்பாபட்டியில் தனிக்கொடி என்பவரும் கீரிப்பட்டியில் கருத்த கண்ணன் என்பவரும் வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருமே அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சார்பில் நிறுத்தப்பட்டவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பாப்பாபட்டியில் சுப்பன் என்பவரும், கீரிப்பட்டியில் பூங்கொடி என்பவரும்போட்டியிட்டனர் என்பது நினைவிருக்கலாம்.இவர்கள் இருவருமே தோற்றுவிட்டனர்.












Click it and Unblock the Notifications