முன்னாள் டிஜிபி மீதான சஸ்பென்ஷன் உத்தரவு ரத்து
சென்னை:
தமிழக முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்துக்கு விதிக்கப்பட்ட இடைநீக்க (சஸ்பென்ஷன்) உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மீதான புகார்கள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பணியில் சேர வருபவர்களிடம் எல்.ஐ.சி. பாலிசி எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது, பணிஇடமாற்றம் வேண்டுபவர்களிடம் பணம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காரணமாக கடந்த ஆண்டுசெப்டம்பர் 20ம் தேதி ரவீந்திரநாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ரவீந்திரநாத் மீதான சஸ்பென்ஷன் உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
அவரது பதவிக்காலம் முடிவடைவதையொட்டி சஸ்பென்ஷன் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இருப்பினும் அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தில் ரவீந்திரநாத்தின் பெயரும் அடிபட்டதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications