திமுக போனால் பாஜக அஞ்ச வேண்டியதில்லை: ஜெ.
சென்னை:
தமிழகத்திற்கு நிதியுதவி கேட்டு மத்திய அரசை திமுக மிரட்டும் பட்சத்தில், மத்திய அமைச்சரவையிலிருந்தேதிமுகவை பாஜக சந்தோஷமாக வெளியேற்றி விடும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று(செவ்வாய்க்கிழமை) கூறினார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு மத்திய அரசை மிரட்ட திமுக தயாரா என்றுநேற்று சட்டசபையில் நிதி அமைச்சர் பொன்னையன் கேட்டார்.
தமிழக அமைச்சர்கள் யாராவது என்னுடன் டெல்லிக்கு வந்தால், நான் நிச்சயம் மத்திய அரசிடம் இதுபற்றிவலியுறுத்துவேன் என்று சட்டசபை திமுக துணைத் தலைவரான துரைமுருகனும் உறுதியாகக் கூறினார்.
இதுகுறித்து இன்று சட்டசபையில் ஜெயலலிதா பேசியதாவது:
மத்திய அரசை திமுக மிரட்டுவது சந்தேகம்தான். ஏனென்றால் மத்திய அமைச்சர் பதவி போய் விடுமே?
மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டுமல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டே திமுக வெளியில்வந்தால் கூட பாஜகவுக்கோ மத்திய அரசுக்கோ எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. மாறாக, அதுதான் மத்தியஅரசுக்கே நல்லது.
எனவே திமுக வெளியே போய்விடுமே என்று மத்திய அரசு பயப்பட வேண்டியதே இல்லை என்றார் ஜெயலலிதா.
பின்னர் சட்டசபைக் கூட்டம் முடிந்து வெளியேறும்போது, குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகஅரசு ராஜினாமா செய்ய வேண்டுமா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார்.
முந்தைய திமுக ஆட்சியின்போது உயர் பதவிகளில் இருந்த சில அதிகாரிகளிடம் விரைவில் விசாரணைநடத்தப்படுமா என்று கேட்டதற்கு, அதைப் பற்றியெல்லாம் இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது என்றுஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications