மறு தேர்தலுக்கு உத்தரவிடாமல் வாக்கு எண்ணிக்கை நடத்துவதா? - கருணாநிதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் அதிமுகவினரின் அராஜகத்தைக் கண்டித்து சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த பிறகும் கூட மறு தேர்தலுக்கு உத்தரவிடப்படாமல் இருப்பதை திமுகதலைவர் கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) வன்மையாகக் கண்டித்தார்.

சென்னையில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியின் 16 மற்றும் 99வது வார்டுகளில் நேற்று நடந்த தேர்தலின்போது அதிமுகவினர்வழக்கம்போல அராஜகம் செய்தனர்.

வாக்காளர்களை அடித்துத் துரத்திவிட்டு, தேர்தல் பணியாளர்களையும் மிரட்டிவிட்டு அவர்களாகவே வாக்குச்சீட்டுக்களைக் கைப்பற்றி கள்ள ஓட்டுப் போட்டனர்.

இதுகுறித்து நாங்கள் உடனடியாகப் புகார் கொடுத்தபோதிலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு,இதைக் கண்டித்த திமுகவினரைக் கைது செய்தது.

மேலும் இன்று சட்டசபையில் இதுகுறித்து திமுகவினரைப் பேச விடாமலும் ஆளுங்கட்சி தடுத்து விட்டது. இதனால்திமுக மட்டுமில்லாமல் அனைத்து எதிர்க் கட்சிகளுமே வெளிநடப்பு செய்துவிட்டன.

இப்படி அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்த பின்னரும் கூட, மறு தேர்தலுக்கு உத்தரவிடாமல்தேர்தல் கமிஷன் மெளனம் சாதித்து வருகிறது. இன்று நடக்கும் வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணிப்போம்என்றும் நாங்கள் அறிவித்து விட்டோம்.

இன்று அவர்களாகவே வாக்கு எண்ணிக்கை நடத்துறாங்க. அவர்களாகவே முடிவுகளைச் சொல்லிக்கொள்கிறார்கள்.

இத்தகைய அராஜகங்களெல்லாம் மக்களுக்கு நன்றாகவே தெரியும். இதற்கு மக்கள் பதிலளிக்க வேண்டியநேரத்தில் கட்டாயம் பதிலளிப்பார்கள் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+