புதுப் பொலிவு பெற்றது ராமேஸ்வரம் கோவில்
ராமேஸ்வரம்:
புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் 2-வது சுற்றுப் பிரகாரம் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகுநேற்று (திங்கள்கிழமை) பக்தர்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
காசியில் ஆரம்பிக்கும் புனித யாத்திரையை ராமேஸ்வரத்தில் முடிக்க வேண்டும் என்ற ஐதீகம் மக்களிடையேஉள்ளது.
சீதையை மீட்பதற்காக ராமர் இலங்கைக்கு செல்லும் முன் லிங்கத்தை வைத்துப் பூஜை செய்த இடம் என்றவரலாற்றுச் சிறப்பு பெற்றது ராமேஸ்வரம்.
இங்குள்ள ராமநாதசுவாமி கோவிலில் புதுப்பிக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்காக 2-வதுசுற்றுப் பிரகாரம் மூடப்பட்டிருந்தது. அங்கு வண்ணம் பூசப்பட்டு வந்தது. மராமத்துப் பணிகளும் நடந்து வந்தன.
இந்தப் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டது. இதையடுத்து 2-வது சுற்றுப் பிரகாரம் பக்தர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. இந்த பிரகாரத்தில் மட்டும் 32 புனித தீர்த்தக் கிணறுகள் உள்ளன. கோவில் முழுவதும்புதுப்பிக்கப்பட்டு, புது வண்ணம் பூசப்பட்டு பளபளக்கிறது.












Click it and Unblock the Notifications