திருச்சி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
திருச்சி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலியான 17 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
திருச்சி கார் விபத்தில் 17 பேர் பலியான தகவல் கேட்டு வேதனையுற்றேன். 17 பேரையும் இழந்து வாடும்குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.50,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.15,000 நிதியும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலாரூ.6,000 நிதியும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு மாவட்டநிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன்என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications