பிசுபிசுத்துப் போன வணிகர்களின் கடையடைப்பு போராட்டம்
சென்னை:
தமிழகம் முழுவதும் வணிகர்கள் நடத்திய கடையடைப்புப் போராட்டம் பிசுபிசுத்துப் போனது. பெரும்பாலானபகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் ஜோராக நடந்தது.
அரிசி மற்றும் கோதுமைக்கு விற்பனைக்கு விதிக்கப்பட்ட வ விதிப்பைக் கண்டித்து இந்த கடையடைப்புபோராட்டத்திற்கு தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.
இந்தக் கடையடைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கியது. ஆனால் தமிழகம் முழுவதிலும்கடையடைப்பு நடந்தது என்று கூற முடியாது.
சென்னையில் ராயபுரம் உள்ளிட்ட வட சென்னைப் பகுதிகளில் 60 சதவீதக் கடைகள் மூடப்பட்டிருந்தன. அதிகநெரிசல் மிக்க ரங்கநாதன் தெருப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் மற்ற பகுதிகளில்ஓரளவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
நெல்லையில் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் கதவுகளைப்பாதியளவுக்குத் திறந்து வைத்துக் கொண்டு ஏராளமான கடைகளில் அரிசி வியாபாரம் ஜரூராக நடந்துகொண்டுதானிருந்தது.
மதுரையில் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்படவில்லை. அடைக்கப்பட்டிருந்த பல கடைகளும் பிற்பகலுக்குமேல் திறக்கப்பட்டன.
தஞ்சையில் முழு அளவில் கடையடைப்பு இருந்ததாக தகவல்கள் வந்துள்ளன. ஓட்டல்கள் போன்றவை திறந்தேஇருந்தன.
தமிழகம் முழுவதும் பரவலமாக கடையடைப்பு நடந்தது என்றாலும் கூட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குபாதிப்பில்லை என்று போலீசார் தெரிவித்தனர். அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்றும்அவர்கள் கூறினார்.












Click it and Unblock the Notifications