வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் தொடங்கியது
சென்னை:
அரிசி, கோதுமை மீதான வரி விதிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் இன்று (செவ்வாய்க்கிழமை)வணிகர்களின் கடையடைப்புப் போராட்டம் தொடங்கியது.
அரிசி மற்றும் கோதுமைக்கு ஆரம்ப கட்ட விற்பனையின்போது 2 சதவீத வரி விதிக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியானது.
இதை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது.
கடையடைப்பு தொடர்பாக பல்வேறு வணிகர் சங்கங்களுக்கு இடையே பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில்,வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரவைக்குட்பட்ட வணிகர் சங்கங்கள் கடையடைப்புதிட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவித்தனர்.
அதன்படி செவ்வாய்க்கிழமை காலை கடையடைப்பு போராட்டம் தொடங்கியது.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் பலசரக்குக் கடைகள், அரிசிக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சிலஇடங்களில் சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அவர்களும் பாதி கடைகளை மூடி வைத்தேவியாபாரம் செய்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பிற பகுதிகளிலும்ஓரளவு கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications