பால் கவரில் கூட தமிழ் இருக்கக் கூடாது: கர்நாடகாவில் தமிழ் படும்பாடு
பெங்களூர்:
பெங்களூரில் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் வரையிலான பகுதி முன்பு தமிழகத்துடன் இருந்தது. மொழிவாரிமாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது முழு பெங்களூரும் கர்நாடகாவுக்குள் போனது.
இதனால் தமிழகத்தில் இருந்த தமிழர்கள் கர்நாடகவுக்குள் இடம் மாறினர். இப்போதும் பெங்களூரில் 40சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தமிழர்கள் தான்.
இதை கர்நாடக அரசின் சென்சஸ் மறைத்துவிடுவது வழக்கம்.
இத்தனைத் தமிழர்கள் இருப்பதால் கர்நாடக கூட்டுறவு பால் சங்கம் நந்தினி என்ற பெயரில் விற்று வரும் பாலின்பாக்கெட் கவர்களில் தமிழிலும் பெயரை அச்சிட்டு வருகிறது.
இதற்கு இப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் வசனம் இடம் பெற்றதால் ஒரு கன்னட படத்தையே ஓட்டவிடாமல் தடுத்து வரும் சில பெருந்தன்மையான ஆத்மாக்கள் தான் இப்போது இந்த பால் பாக்கெட்விவகாரத்தையும் பெரிதாக்கி வருகின்றன.
கன்னட சங்கர்ஷ சமிதி என்ற கன்னட அமைப்பின் ராமண்ணா கூறுகையில், தமிழில் பெயர் அச்சிடப்பட்டுள்ள பால்கவர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றுஅறிவித்துள்ளார்.
உடுப்பி விலாஸ்களுக்கும், பெங்களூர் பேக்கரிகளுக்கும், கன்னட நடிகர்களுக்கும் நாம் சிவப்புக் கம்பளம் விரித்துக்கொண்டிருக்கிறோம்.
அங்கே தமிழை நோகடிப்பதையே ஒரு வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications