கம்போடியாவில் வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

பினோம் பென்:

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் வாஜ்பாய் இன்று (செவ்வாய்க்கிழமை) கம்போடியா போய்ச்சேர்ந்தார்.

கம்போடிய பிரதமர் சாம்டெக் ஹன் சென் மற்றும் சில மூத்த அமைச்சர்கள் பினோம் பென் விமான நிலையத்தில்வாஜ்பாய்க்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.

ஏராளமான கம்போடியக் குழந்தைகளும் இந்திய-கம்போடிய தேசியக் கொடிகளை அசைத்து வாஜ்பாயைவரவேற்றனர்.

மூன்று நாட்கள் கம்போடியாவில் இருக்கும் வாஜ்பாய், அந்நாட்டு பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் பாதுகாப்பு,விவசாயம், சுற்றுலா, ஓட்டல் நிர்வாகம் உள்ளிட்ட பலதுறைகளில் இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் குறித்துதொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் இரு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளும் இந்தியாவிலிருந்து கம்போடியாவுக்கோ அல்லதுகம்போடியாவிலிருந்து இந்தியாவுக்கோ செல்வதற்காகத் தேவைப்படும் விசாவிலிருந்து விலக்கு அளிப்பதற்கானமுக்கியமான ஒப்பந்தத்திலும் இரு நாட்டுப் பிரதமர்களும் கையெழுத்திடவுள்ளனர்.

பின்னர் கம்போடிய மன்னர் நோரோடோம் ஸிஹானெளக்கை சந்திக்கவிருக்கும் வாஜ்பாய், அந்நாட்டிலுள்ள புகழ்பெற்ற அங்கோர்வாட், பெயோங் மற்றும் டாபிரம் ஆகிய கோவில்களுக்கும் செல்கிறார்.

முன்னதாக சிங்கப்பூரிலிருந்து வாஜ்பாய் கிளம்ப வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிறுதொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர் 30 நிமிடங்கள் தாமதமாகக் கிளம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் வெளிநாட்டுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில்சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+