மாவட்ட சேர்ப்புக்கு எதிர்ப்பு: கோர்ட்டில் கருப்புக் கொடி ஏற்றிய வக்கீல்கள் கைது
Subscribe to Oneindia Tamil
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைப்பதை எதிர்த்து அம்மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்இன்று (புதன்கிழமை) கருப்புக் கொடி ஏற்ற முயன்ற வக்கீல்களை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தை,மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதை அரியலூரில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்து வருகின்றனர். தங்களது எதிர்ப்பை தினந்தோறும்பல்வேறு வழிகளில் அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கருப்புக் கொடி ஏற்றமுயன்றனர்.
ஆனால் போலீசார் உடனே தலையிட்டு அவர்களைக் கைது செய்தனர்.
இதற்கிடையே, அரியலூர் பஸ் நிலையம் முன்பாக ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் உண்ணாவிரதம்












Click it and Unblock the Notifications