திமுகவின் சிமெண்ட் ஊழல்: ஆதாரங்கள் கேட்கிறது பாஜக
திருச்சி:
மத்திய வர்த்தக அமைச்சர் முரசொலி மாறன் மீது சுமத்தப்பட்டுள்ள சிமெண்ட் ஊழல் குற்றச்சாட்டுக்கு தகுந்தஆதாரங்களை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் இல. கணேசன்இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.
திருச்சியில் இல. கணேசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
"கார்ட்டெல்" முறை மூலமாக மாறன் ஆண்டுக்கு ரூ.1,700 கோடி கொள்ளையடித்து வருவதாக தமிழக நிதிஅமைச்சர் பொன்னையன் நேற்று சட்டசபையில் கூறியுள்ளார்.
திமுகவின் ஆதரவு தேவை என்பதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு இதைக் கண்டு கொள்ளாமல்இருப்பதாகவும் பொன்னையன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தப் புகாரை ஆதாரபூர்வமாக நிரூபித்தால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது.
மேலும் மாநிலங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் மத்திய அரசு எப்போதுமே பாரபட்சம் காட்டியதில்லை.இவ்விஷயத்தில் மேற்கு வங்காளத்திலிருந்து கேரளா வரை அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசுசரிசமமாகத்தான் நடத்தி வருகிறது.
தமிழகத்திற்கு நிதியுதவி பெற்றுத் தருவதற்காக மத்திய அரசை வற்புறுத்த தமிழக பாஜகவும் தயாராகவே உள்ளது.தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவை என்னுடன்அனுப்புங்கள். நான் தமிழகத்திற்காக நிதியுதவி கேட்டு பிரதமரிடம் பேசுகிறேன்.
கர்நாடகா போன்ற மாநிலங்களில் பொதுவான பிரச்சனைகள் அனைத்திலும் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும்ஒற்றுமையாகத்தான் இருக்கின்றன.
அதேபோல் தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் எதிர்க் கட்சியான திமுகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.அரசியல் வேறுபாடுகளை சட்டசபையில் அவர்கள் காட்டக் கூடாது.
எந்தக் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்பதை அடுத்து வரும் பொதுத் தேர்தலின்போதுதான்நாங்கள் முடிவு செய்வோம். இப்போது அது குறித்து ஒன்றும் கூற இயலாது.
இப்போதைக்கு தமிழகத்தில் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் சுதந்திரமாக இருந்து வருகிறோம் என்றார் இல.கணேசன்.
குஜராத் விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாய் தலையிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளது பற்றிநிருபர்கள் கேட்டதற்கு, வாஜ்பாய் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்து விட்டதாக இல. கணேசன்பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications