சிமெண்ட் விலையை உயர்த்தி "கோபாலபுரம்" அடித்த கொள்ளை: பொன்னையன் தாக்கு
சென்னை:
சிமெண்ட் விலையைக் கடுமையாக உயர்த்தி அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,700 கோடி கொள்ளையடித்து வருவதில்"கோபாலபுரத்திற்கும்" மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனுக்கும் நிறையப் பங்கு உண்டு என்று நிதிஅமைச்சர் பொன்னையன் புகார் கூறினார்.
சிமெண்ட் ஊழல் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டசபையில் பொன்னையன் கூறியதாவது:
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு மூட்டை சிமெண்ட்டின் விலை ரூ.65ஆக மட்டுமே இருந்தது.
வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கமுடிவெடுக்கப்பட்டது. பணம் புடைத்த "கோபாலபுரம்" (திமுக தலைவர் கருணாநிதி வீடு இருக்குமிடம்) கும்பல்அந்தப் பங்குகளை வாங்கியது.
சங்ககிரி, தாழையூத்து உள்பட தமிழகத்திலும் ஆந்திராவிலும் பல சிமெண்ட் ஆலைகளை இந்தக் கும்பல்வாங்கியது. கோரமண்டல், ராசி, பிரியங்கா என்று பல வர்த்தகப் பெயர்களில் சிமெண்ட் விற்கப்பட்டது. எல்லாம்"கோபாலபுரம்" அளித்த பணத்தின் மூலமாகத்தான்.
அதன் பிறகு சிமெண்ட் விலையை நிர்ணயிப்பதற்கு "கார்ட்டெல்" திட்டம் வகுக்கப்பட்டது. இதையடுத்துதான்சிமெண்ட்டின் விலை மூட்டைக்கு ரூ.150, ரூ.160, ரூ.180 என உயர்ந்து கொண்டே போனது.
இந்த விலை உயர்வு தமிழகத்தில் மட்டும்தான். ஆந்திராவில் அப்போது ஒரு மூட்டை சிமெண்ட்டின் விலை ரூ.110மட்டுமே. இதனால் ஆந்திர, கர்நாடக மற்றும் கேரள முதல்வர்கள் தமிழகத்தில் சிமெண்ட் விலை உயர்வுக்கு கடும்எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையடுத்தே இந்தோனேசியா மற்றும் கொரியாவிலிருந்து விலை குறைவான சிமெண்டை இறக்குமதி செய்யமத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால் மத்தியில் அமைச்சராக இருக்கும் மாறன், சிமெண்ட்டுக்கு 33 சதவீதவரியை விதித்தார்.
மேலும் இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட்டுக்கு "இந்தியத் தர நிர்ணய" அமைப்பின் சான்றிதழைப் பெறவேண்டும் என்பதற்காக துறைமுகத்திலேயே 21 நாட்கள் வரை அதை வைத்திருக்க வேண்டும் என்ற நிலைஏற்பட்டது.
இவ்வாறு பல முட்டுக் கட்டைகளை மாறனின் அமைச்சகம் போட்டுக் கொண்டே வந்ததால், "கார்ட்டெல்" திட்டத்தில்சிக்கிக் கொள்ள விரும்பாதவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் சிமெண்ட்டின் விலை தொடர்ந்துஏறுமுகமாகவே இருக்க ஆரம்பித்தது.
இந்தக் "கார்ட்டெல்" முறை மூலம் ஆண்டுக்கு ரூ.1,700 கோடி கொள்ளை நடைபெறுகிறது. திமுகவின் ஆதரவுதேவை என்பதால் பாஜக அரசு இந்த விஞ்ஞான ரீதியான ஊழலைக் கண்டு கொள்ளாமலேயே இருந்து வருகிறது.
இந்தச் சுரண்டலைத் தடுக்க அனைத்துக் கட்சியினரும் மேலும் ஒரு "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தைநடத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா விடுதலையடைந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக 24 சதவீத வரிவிதிக்கப்பட்டுள்ளது. அதாவது தரத்திற்கேற்ப ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.135 அல்லது ரூ.145க்கு மேல் விற்பனைசெய்தால் 24 சதவீத விற்பனை வரி விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அணுகுமுறையால் சிமெண்ட் விலை ஓரளவு குறைந்துள்ளது. இதை மேலும் குறைப்பதற்காகமுதல்வர் ஜெயலலிதா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றார் பொன்னையன்.
நேற்று திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டதால், அதன் கூட்டணிக் கட்சிகளான பாஜகமற்றும் பாமகவின் எம்.எல்.ஏக்கள் மட்டுமே அவையில் உட்கார்ந்து பொன்னையனின் பேச்சை அமைதியாகக்கேட்டுக் கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications