சென்னை கம்ப்யூட்டர் நிறுவனத்தில் துணிகர கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தரமணி பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் கல்வி நறுவனத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள்மற்றும் பிற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

தரமணி மத்திய பாலிடெக்னிக் அருகே உள்ளது கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா நிறுவனம். இங்குவெங்கடேஷ் என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார்.

கடந்த திங்கள்கிழமை இரவும் வழக்கம் போல வெங்கடேஷ் பணியில் இருந்தார். அப்போது இரவு 12 மணிக்குமேல் ஒரு கும்பல் வேனில் வந்தது. அவர்கள் வேனில் இருந்து இறங்கி அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.

இவர்களைப் பார்த்த வெங்கடேஷ் அவர்களை நெருங்கிச் சென்று விசாரித்தார். ஆனால் அந்தக் கும்பல் பதில் ஏதும்சொல்லாமல் வெங்கடேஷை அடித்து உதைத்தனர். பிறகு கை , கால்களைக் கட்டி ஒரு மூலையில் அவரை உட்காரவைத்தனர்.

பின்னர் அந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு உள்ளே நுழைந்தனர்.

அங்கிருந்த 5 கம்ப்யூட்டர்கள், ஜெராக்ஸ் மெஷின், பேக்ஸ் மெஷின், மோடம், 4 பிரிண்டர்கள், ரூ.6லட்சம்மதிப்புள்ள வைப்புப் பத்திரங்கள் ஆகியவற்றை அள்ளி எடுத்து வேனில் போட்டுக் கொண்டு அந்தக் கும்பல்ஓடிவிட்டது.

பின்னர் செவ்வாய்க்கிழமை காலையில் காவலர் பணிக்கு வந்த ராஜேந்திரன், கட்டப்பட்ட நிலையில் வெங்கடேஷ்இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

உடனடியாக வேளச்சேரி போலீசாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.


கொள்ளையர்களைப் பிடிக்க வேளச்சேரி போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+