பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க காங்கிரஸ் கோரிக்கை
டெல்லி:
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைஇந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் புலிகள் அமைப்புக்கு சர்வதே அங்கீகாரம் தேடித் தரும் முயற்சிகளில்அதன் தலைவர் பிரபாகரன் ஈடுபட்டுள்ளார்.
சர்வதேச கண்ணோட்டத்தில் புலிகள் இயக்கத்துக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் முயற்சி தான் இது. இதன் மூலம்எல்லாம் புலிகள் இயக்கத்துக்கு நல்ல பெயர் கிடைத்துவிடாது.
பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வாஜ்பாய் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அந்த இயக்கம் செய்த தவறுகள், தீவிரவாத செயல்கள் ஆகியவை இது போன்ற பத்திரிக்கையளர்கள் சந்திப்புமூலம் சரியாகிவிடாது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தேடப்படும் குற்றவாளியான அவரைஇந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
இந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக சி.பி.ஐயால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளபிரபாகரனின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து இந்திய அரசு இதுவரை எந்தக் கருத்தும்தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே பிரபாகரனின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி பல மணி நேரமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. காலையில் நடக்க இருந்த இந்தச் சந்திப்பு பகலுக்கு மாற்றப்பட்டது. பின்னர் பிற்பகலுக்குஒத்திவைக்கப்பட்டது. இப்போது மாலையில் தான் சந்திப்பு என்று கூறப்பட்டுள்ளது.
பிரபாகரனைச் சந்திக்க நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் உலகம் முழுவதும் இருந்து இலங்கையில்குவிந்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் புலிகள் வரவேற்று கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களுக்கு புலிகள்குறித்த வீடியோக்கள் காட்டப்பட்டு வருகின்றன.
எந்த இடத்தில் எத்தனை மணிக்கு பிரபாகரன் அவர்களைச் சந்திப்பார் என்று ஏதும் கூறப்படவில்லை.
பாதுகாப்புக் காரணங்களினால் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிருபர்கள்கொண்டு வந்த வீடியோ மேகராக்கள், புகைப்பட கேமராக்கள், அவர்கள் பைகள் அனைத்தும் புலிகளால் கடும்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications