கடன் தொல்லை: ஈரோடு அருகே குடும்பமே தற்கொலை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு அருகே ஒரு கிராமத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.

ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.ஆறுமுகம் பத்திரம் எழுதிக் கொடுத்து அதன் மூலம் சம்பாதித்து வந்தார்.

கடந்த ஆண்டு அவர் ஏராளமான கடன்களை வாங்கி தனக்கென சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டினார்.

ஆனால் இந்தக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடந்த இரு மாதங்களுக்கு முன் ஆறுமுகம்தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து சோற்றுக்கே வழியில்லாமல் இந்த இரண்டு மாதங்களாகச் சிரமப்பட்ட ஆறுமுகத்தின் மனைவி, இன்று(புதன்கிழமை) தன்னுடைய மகனுக்கும் மகளுக்கும் விஷத்தைக் கொடுத்து விழுங்கச் சொல்லி தானும் அதைக்குடித்தார்.

அடுத்த சிறிது நேரத்திலேயே இவர்கள் மூன்று பேரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+