பொன்னையன் ஒரு ஞானசூனியம்!: சிமெண்ட் விலை விவகாரத்தில் மாறன் பதில்
சென்னை:
எந்த அமைச்சருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கூடத் தெரியாத நிதியமைச்சர் பொன்னையன் ஒருஞானசூனியம் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சரும் திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவருமான முரசொலிமாறன் கூறினார்.
சிமெண்ட் விலை உயர்வுக்கு முரசொலி மாறன் மீது பொன்னையன் குற்றம் சாட்டியிருந்தார். சில சிமெண்ட்ஆலைகளில் மாறனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முதலீடு உள்ளதாகக் கூறியிருந்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிமெண்ட் விலை உயர்வுக்கு நான் எந்த விதத்திலும் காரணமில்லை. சிமெண்ட் மீதான இறக்குமதி வரியைஅதிகரிப்பதும் குறைப்பதும் மத்திய நிதியமையச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
சமீபத்தில் இதன் மீதான இறக்குமதி வரியை நிதியமைச்சர் குறைத்தார். நிலைமை அப்படி இருக்க வர்த்தகஅமைச்சரான நான் தான் சிமெண்ட் மீதான வரியை நிர்ணயிப்பது போல பொன்னையன் பேசியிருக்கிறார்.
எந்த அமைச்சருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இருக்கும் நிதியமைச்சர்பொன்னையனை ஞானசூனியம் என்று அழைப்பது தவிற வேறு வழியில்லை.
எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ எந்த சிமெண்ட் ஆலையிலும் முதலீடு இல்லை. சட்டசபையில் இந்தக்குற்றச்சட்டை கூறியிருக்கும் பொன்னையன் வெளியிலும் இந்தக் குற்றச்சாட்டை கூற முன் வருவாரா?
சட்டசபையில் பேசினால் வழக்குத் தொடர முடியாது என்பதால் பொன்னையன் இதை அங்கு மட்டும்பேசியிருக்கிறார். அதை வெளியில் வந்து பேசக் கூடிய தைரியம் பொன்னையனுக்கு இருக்கிறதா?
எனக்கு சிமெண்ட் நிறுவனங்களில் முதலீடு இருப்பதாக தமிழக அரசு நிரூபிக்க முடியுமா? அவ்வாறு நிரூபித்துக்காட்டினால் எனது மத்திய அமைச்சர் பதவியைக் கூட ராஜினாமா செய்ய நான் தயார்.
அதை நிரூபிக்கத் தவறினால் தனது பதவியை ராஜினாமா செய்ய பொன்னையன் தயாரா?
இவ்வாறு சவால் விட்டுள்ளார் மாறன்.
மாறனுக்கு சிமெண்ட் நிறுவனத்தில் முதலீடு இருந்ததால் தான் அந்த சிமெண்ட்டை அதிக விலைக்கு விற்பதற்காகவரிகளே மாற்றியமைக்கப்பட்டன என்று பொன்னையன் குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த திமுக ஆட்சியில் சிமெண்ட் மூட்டையின் விலை தமிழகத்தில் இரண்டு மடங்கு உயர்ந்தது. அப்போதேமாறன் மீது இந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால், அதை முதல்வராக இருந்த கருணாநிதி மறுத்தார்.
மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தான் சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கார்ட்டெல் என்ற திட்டமும்அமலுக்கு வந்தது. இதனால் எல்லா மாநிலங்களிலும் சிமெண்ட் விலை உயர்ந்தது. தனது நிறுவனத்தின்சிமெண்டுக்கு அதிக விலையை நிர்ணயிக்கவே இத் திட்டத்தை மாறன் அமல்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications