சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி ஹெராயின் பறிமுதல்: இலங்கை நபர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து விமானம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயினைக் கடத்திச் செல்ல முயன்ற இலங்கையைச்சேர்ந்த நபரை போதை ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் புறப்படுபவர்களுக்கான அறையில் போதை ஒழிப்புப் போலீசார்நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு திடீரென்று சோதனை நடத்தினர்.

இலங்கையைச் சேர்ந்த அபுதீன் முகம்மது கஜாலி (44) என்பவர் தன்னுடைய சூட்கேசின் அடிப்பகுதியில்ரகசியமான ஒரு இடத்தில் ஐந்து கிலோ எடையுள்ள ஹெராயினைப் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் அப்போதுகண்டுபிடித்தனர்.

சர்வதேசச் சந்தையில் ரூ.5 கோடி மதிப்புள்ள அந்த ஹெராயினைக் கைப்பற்றிய போதை ஒழிப்புப் போலீசார்,அபுதீனையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடமிருந்து ரூ.440 இந்தியப் பணத்தையும் வேறு சில ஆவணங்களையும் கூட போலீசார் கைப்பற்றினர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வளவு மதிப்புள்ள ஹெராயின் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்படுவதுஇதுதான் முதல் முறையாகும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+