கருணாநிதி மீது வாய்தவறி குற்றம் சாட்டிவிட்டேன்: ஜெயலலிதா வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மீது வாய்தவறி தவறுதலாகக் குற்றம் சாட்டிவிட்டேன் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.

நேற்று நிதியமைச்சர் பொன்னையன் பேசுகையில், காவிரி நதி நீர் விவகாரத்தில் அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில்தொடர்ந்த வழக்கு 1971ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது வாபஸ் வாங்கப்பட்டது.

தன் மீது போடப்பட்ட பூச்சி மருந்து ஊழல், கோதுமை ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க முயன்ற கருணாநிதிஅப்போதைய பிரமதர் இந்திரா காந்தியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு காவிரி வழக்கை வாபஸ் பெற்றார்என்றார்.

அப்போது பேசிய த.மா.கா. தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், கருணாநிதி மீது 1976ம் ஆண்டு சி.பி.ஐ.விசாரணையே போடப்பட்டது. அப்படி இருக்கும்போது 1971ம் ஆண்டு காவிரி வழக்கை வாபஸ் பெற்றதற்கும்கருணாநிதியின் மீதான வழக்குகளுக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்? என்றார்.

உடனே ஜெயலலிதா தலையிட்டு, சி.பி.ஐ. விசாரணையில் இருந்து தப்ப இந்திரா காந்தியிடம் கருணாநிதிசரணடைந்து காவிரி வழக்கை வாபஸ் வாங்கினார். இது தான் வரலாறு. தனது சுயநலத்தத் விவசாயிகளின் வாழ்வில்கருணாநிதி விளையாடிவிட்டார் என்றார் ஜெயலலிதா.

இந் நிலையில் இன்று சட்டப் பேரவையில் பேசிய ஜெயலலிதா, நேற்று திமுக தலைவர் மீது காவிரி விவகாரத்தில்தவறான குற்றம் சாட்டிவிட்டேன். தவறு செய்வது மனித இயல்பு தான். அதே போல் நானும் வாய்தவறி அவர் மீதுகுற்றம் சுமத்திவிட்டேன். அதை நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று அறிவித்தார்.

கருணாநிதி மீது கூறிய குற்றச்சாட்டை ஜெயலலிதா திரும்பப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

1971ம் ஆண்டு நடந்த ஒரு விவகாரத்தை 1976ம் ஆண்டு நடந்த பிரச்சனையோடு சம்பந்தமேயில்லாமல் முடிச்சுப்போட்டு பொன்னையன் தான் இந்தக் குழப்பத்தைத் தொடங்கி வைத்தார்.

அதை எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தவறு என்று சுட்டிக் காட்டிய பின்னரும் ஜெயலலிதா தொடர்ந்து திமுகதலைவர் மீது அபாண்டமாக குற்றம் சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+