ஜெ. மன்னிப்பு கேட்க வேண்டும்: கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி விவகாரத்தில் தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்திய முதல்வர் ஜெயலலிதாவும், நிதியமைச்சர்பொன்னையனும் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

இன்று நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

சட்டசபையில் என்ன பேசினாலும் அதை நீதிமன்றம் மூலம் தட்டிக் கேட்க முடியாது என்ற தைரியத்தில்பொன்னையன் வாய்க்கு வந்தபடி பேசித் திரிகிறார். அவருடன் சேர்ந்து கொண்டு ஜெயலலிதாவும் காவிரிவிவகாரத்தில் என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்களின் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை. காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நான்ஒருபோதும் துரோகம் இழைத்தது இல்லை. அதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

சட்டமன்றத்தில் பேசினால் கேஸ் போட முடியாது என்பதால் பொன்னைய்யன் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.

பட்ஜெட் விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொன்னையன் அதைவிட்டுவிட்டு தேவையில்லாமல் திமுக மீது குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்.

1971ம் ஆண்டில் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைத் தீர்க்க முயல்வோம்.முடியாவிட்டால் மீண்டும் வழக்குத் தொடர்வோம் என்ற நிபந்தனையைச் சொல்லித் தான் வழக்கு வாபஸ்பெறப்பட்டது. பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்க நல்லெண்ணத்தின் படி, அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்திதீர்மானம் நிறைவேற்றி எடுக்கப்பட்ட முடிவு அது.

அதற்கும் 1976ம் ஆண்டில் என் மீது மத்திய அரசு போட்ட பொய் வழக்குகளுக்கும் சம்பந்தா சம்பந்தமேயில்லாமல்தொடர்புபடுத்தி ஜெயலலிதாவும் பொன்னையனும் வாய்க்கு வந்தபடி பேசி வருவது மிக வன்மையாகக்கண்டிக்கத்தக்கது.

திமுக மீது குற்றம் சாட்டுவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு வரலாறே தெரியாது. அவரது அரசியல் தலைவர் எம்.ஜி.ஆரே கூட தமிழர் நலனைக் காப்பதில்திமுகவும் அதிமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று தான் கூறியிருந்தார். இதெல்லாம் ஜெயலலிதாவுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என் மீது புழுதிவாரித் தூற்றிய ஜெயலலிதாவும் பொன்னையனும் மன்னிப்பு கேட்க வேண்டும். என்னை மட்டுமல்லஇந்திரகா காந்தியையும் இந்த இருவரும் அவமதித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க. கூட்டணியில் தொடர்வோம்:

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து திமுக விலகுமா என்று அதிமுக கேட்கிறது. இதைக் கேட்க இவர்கள் யார்? நாங்கள்வெளியேறிவிட்டால் அந்த இடத்தில் இவர்கள் போய் உட்கார்ந்து கொண்டு அமைச்சர் பதவிகளை பிடிக்கநினைக்கிறார்களா?

இனி நாங்களும் வன்முறை செய்வோம்:

நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் அதிமுக வென்றுள்ளது. அது அராஜகத்துக்கு கிடைத்தவெற்றி. இனி வரும் தேர்தல்களில் அவர்களைப் போலவே அராஜகமான தேர்தல் முறைகளில் திமுகவும் ஈடுபடும்என்பதைக் கூறிக் கொள்கிறேன். இனி தான் சரிப்பட்டு வரும் என்றார் கருணாநிதி.

கருணாநிதி இந்தப் பேட்டியளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் ஜெயலலிதா இந்தக் குற்றச்சாட்டைவாபஸ் பெறுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அந்தத் தகவல் கருணாநிதிக்கு எட்டும் முன் இந்தப் பேட்டியை அவர் அண்ணா அறிவாலயத்தில் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+