காஷ்மீர்: தீவிரவாதிகள் சுட்டு 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

காஷ்மீரில் நாக்னி டான்டா என்ற கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 2பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

தோடா மாவட்டத்தில் உள்ள நாக்னி டான்டா கிராமத்துக்குள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு திடீரென்று புகுந்ததீவிரவாதிகள், அங்கிருந்த மக்களை நோக்கி சராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

இதில் திடா பேகம் மற்றும் ஹலீமா பேகம் ஆகிய இரு பெண்களும், முகம்மது சலீம் மற்றும் ஜாபர் ஆகிய இரண்டு 7வயதுக் குழந்தைகளும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இவர்களில் ஒரு குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது. மற்றொருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+