பிரபாகரன் பேட்டி பலமுறை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

கிளிநொச்சி:

பாதுகாப்பு காரணங்களுக்காக விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏற்பாடு செய்துள்ளபத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பு பல மணி நேரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு நடப்பதாக இருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு பகலுக்கு மாற்றப்பட்டது. பின்னர்பிற்பகல் 3 மணிக்கு தான் சர்வதேச பத்திரிக்கை நிருபர்களை பிரபாகரன் சந்திக்கவுள்ளார் என்று கூறப்பட்டது.

அடுத்து மாலை 6 மணி என்று கூறப்பட்டது. ஆனால், 7 மணி வரை பேட்டி தொடங்கவில்லை.

பாதுகாப்புக் காரணங்களுக்காகத்தான் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்போது எந்தஇடத்தில் எத்தனை மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று உறுதியாக ஏதும் கூறப்படாத நிலையில்நூற்ருக்கணக்கான வெளிநாட்டு, இந்திய, இலங்கை, தமிழ் பத்திரிக்கைளின் நிருபர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில் தகவல் தொடர்பு வசதிகள் மிகவும் குறைவு என்பதால் அதி நவீன கருவிகளுடன் பல வெளிநாட்டுதொலைக்காட்சி நிருபர்கள் குழுமியிருந்தாலும், சந்திப்பு நடைபெறும் இடம் எது என்பது தெரியாததால் எப்படிநேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்வது என்று அவர்கள் குழம்பிக் கொண்டுள்ளனர்.

நிருபர்களின் வீடியோ, புகைப்பட கேமராக்கள், உடமைகள் முழு அளவில் சோதனையிடப்பட்டன. கேமராக்களைஎடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிகிறது. அதற்குப் பதில் நிருபர்களுக்கு புலிகளே தங்கள்வீடியோ கேமராக்களையும் புகைப்படக் கேமராக்களையும் தருவார்கள் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+