பிரபாகரன் பேட்டி: குழப்ப முயலும் ஜே.வி.பி.
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் சங்கடமான கேள்விகளைக் கேட்க வேண்டாம்என்று சர்வதேச நிருபர்களிடம் இலங்கை அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சியான ஜனதா விமுக்திபெரமுனா (ஜே.வி.பி.) குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த பல இனக் கலவரங்களுக்குக் காரணமாக இருந்ததே இந்தஜே.வி.பிதான்.
ஆனால் தற்போது விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் விரைவில்அமைதி திரும்ப இருக்கும் சூழ்நிலையில், ஜே.வி.பி. இத்தகைய அநாவசியமான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச நிருபர்களை பிரபாகரன் இன்று சந்திக்கும் நிலையில், ஜே.வி.பி.இத்தகைய குற்றச்சாட்டை எழுப்பி அனைவரையும் குழப்ப முயற்சி செய்துள்ளது.
இதற்கிடையே பிரபாகரனை நேரடியாகச் சந்தித்து பேட்டி எடுப்பதற்காக வன்னி மாவட்டத்திலுள்ள கிளிநொச்சியில்500க்கும் மேற்பட்ட சர்வதேச நிருபர்கள் குவிந்துள்ளனர்.
நிருபர்களுக்காக உணவு மற்றும் தங்குமிடம் ஆகிய வசதிகளை விடுதலைப்புலிகள் சிறப்பாகச் செய்துகொடுத்துள்ளனர்.
ஆனாலும் கடைசி வரை பேட்டி நடக்கும் இடம் எங்கு என்று தெரியாமல் நிருபர்கள் குழம்பிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications