மெரீனாவில் விஷமருந்திய ஜோடி: காதலி சாவு
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரு காதல் ஜோடி விஷம் அருந்தியது. இதில் காதலிஉயிரிழந்த நிலையில் கவலைக்கிடமான உடல் நிலையுடன் காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மெரீனா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு அருகே ஒரு ஜோடி நேற்று மயங்கிய நிலையில் கிடந்தது.
இவர்களைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து இருவரையும்ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இருவரும் விஷம் குடித்திருந்ததாகத் தெரிய வந்தது. ஆனால் அந்தப் பெண் இறந்து விட்டார். அவருடன் இருந்தவாலிபர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர்கள் வைத்திருந்த பைகளைச் சோதனையிட்டபோது, பெண்ணின் பெயர் காயத்ரி என்றும், அந்த வாலிபரின்பெயர் செல்வகுமார் என்றும் தெரிய வந்தது. ஆனால் இவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதுதெரியவில்லை.












Click it and Unblock the Notifications