கருவிலிருப்பது ஆணா, பெண்ணா? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கைஎடுப்பது குறித்து தமிழக அரசு சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுபோன்ற ஸ்கேன் மையங்கள் மூலம் கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று கண்டறிவதுசட்டப்படி குற்றமாகும்.
எனவே இந்த மையங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றுஅனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி தமிழகம் உள்பட பல மாநிலங்கள் தங்களுடைய அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தன.
இவற்றில் ராஜஸ்தான் மாநில அரசு அனுப்பியுள்ள அறிக்கை மட்டும் திருப்தியளிப்பதாகக் கூறிய நீதிபதிகள்எம்.பி. ஷா, பிஷேஸ்பர் பிரசாத் சிங் மற்றும் எச்.கே. சர்மா ஆகியோர், மற்ற மாநில அரசுகளின் அறிக்கைதிருப்திகரமாக இல்லை என்று அறிவித்தனர்.
எனவே போதுமான தகவல்களுடன் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விவரமான அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் தமிழகம் உள்பட மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருவிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கண்டறியும் கருவிகள் வைத்திருந்த சுமார் 56ஸ்கேன் மையங்கள் மீது தமிழக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications