"வாகனங்களின் புகையை விடவா "தம்" மோசம்?" - பீடி, சிகரெட் வியாபாரிகள் குமுறல்
மதுரை:
பள்ளி, கல்லூரிகள் இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு பீடி, சிகரெட் போன்றவற்றை விற்கக்கூடாது என்று தமிழக அரசு சமீபத்தில் விதித்துள்ள தடையைத் தளர்த்த வேண்டும் என்று பீடி-சிகரெட்தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளின் சங்கங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து மதுரையில் அவர்கள் இன்று (புதன்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
பீடி, சிகரெட்டை விட மோசமான மதுபானம், காபி போன்றவற்றிற்கெல்லாம் இந்த அரசு தடை விதிக்கவில்லை.மேலும் சாலையில் போகும் வாகனங்கள் வெளியிடும் புகையை விடவா பீடி-சிகரெட்டின் புகை விஷம் வாய்ந்தது?
இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத அரசு ஏன் பீடி-சிகரெட் தயாரிப்பாளர்களின் தலையில் கை வைக்கிறது?
பள்ளி, கல்லூரிகள் இருக்கும் இடங்களைச் சுற்றிலும் பீடி-சிகரெட் விற்கக் கூடாது என்ற அரசின் உத்தரவுவரவேற்கத் தகுந்ததுதான்.
ஆனால் பல கல்வி நிறுவனங்கள் கட்டப்படுவதற்கு முன்பாகவே நீண்ட காலமாக அங்கு கடை வைத்திருப்பவர்கள்இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீடி-சிகரெட் புகையினால் ஒரு சதவீத மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். இந்த சாதாரண புள்ளிவிவரம் கூடத்தெரியாமல் அரசு பொது இடங்களில் புகைக்கத் தடை விதிப்பிருப்பது வேதனைக்குரியது.
ஒரு விதத்தில் இதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது சரிதான் என்றாலும், புகைப்பது ஒன்றும் சட்டப்படியான குற்றம்இல்லையே? தனியாக வீட்டில்கூடப் புகை பிடிக்கலாமே?
எனவே கல்வி நிறுவனங்களைச் சுற்றிலும் உள்ள கடைகளில் பீடி-சிகரெட் விற்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையைஉடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் அல்லது தளர்த்திக் கொள்ள வேண்டும்.
இந்தத் தடையால் அந்நியச் செலாவணியுடன் அரசுக்கு சுமார் ரூ.5,500 கோடி வருவாய் ஈட்டித் தரும் இந்தத்தொழிலும் முழுமையாகப் பாதிக்கப்படும். மேலும் பீடி-சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனைத் தொழிலில்ஈடுபட்டுள்ள இரண்டு கோடி மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.
அவர்களுக்கு மறுவாழ்வு தரும் விதமாக ஏதாவது வேலை வாய்ப்பு தரவாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்றுபீடி-சிகரெட் தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்களின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications