எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் டூவில் தவறிய மாணவர்களுக்கு ஜூனில் மறு தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

10ம் மற்றும் 12ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்திலேயே மறு தேர்வு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்த மாணவர்களுக்கு ஓராண்டு வீணாவதைத் தடுக்க முடியும் என்று கல்வி அமைச்சர் தம்பிதுரைநேற்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபையில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஆண்டுதோறும் நடக்கும் 10ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் தேர்வுஎழுதுகின்றனர். இவர்களில் சுமார் 1 லட்சம் பேர் தேர்வில் தோல்வி அடைகின்றனர்.

இதே போல் ஆண்டுதோறும் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதும் சுமார் 4 லட்சம் மாணவர்களில், சுமார் 40 ஆயிரம்பேர் தோல்வி அடைகின்றனர்.

இவர்களுக்கு அக்டோபரில்தான் மறு தேர்வு நடத்தப்பட்டு வந்தது. அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றாலும் அடுத்தகல்வி ஆண்டு வரை அவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளதால் அந்த ஓராண்டு முழுவதும் வீணாகி விடுகிறது.

இதைத் தவிர்க்க ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் மட்டும் தோல்வியடையும் மாணவர்களுக்கு ஜூன்மாதத்திலேயே மறு தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த மறு தேர்வுக்கான முடிவுகளை ஜூலை 15ம் தேதிக்குள் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்படும். இதனால்அவர்கள் அந்த கல்வியாண்டிலேயே மேற்படிப்புக்காக சேர முடியும்.

அரசுத் துறை ஊழியர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் ஆட்சித் தமிழ் என்ற புதிய பாடத்தை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தமிழில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவோரின் பயன்பாட்டுக்காக, தமிழ் பாடத் திட்டம் தயாக்கும் பணி நடந்து வருகிறது.தற்போது வரலாறு மற்றும் புவியியல் பாடங்கள் தயாராகி வருகின்றன.

தொல்காப்பியம், நன்னூல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இலக்கணப் புத்தகம் ஒன்றுதயாரிக்கப்பட்டு வருகிறது.

20வது நூற்றாண்டில் சிறப்பிடம் பிடித்த தமிழர்கள் குறித்த புத்தகம் ஒன்றை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தொகுத்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அறிவியல், அரசியல், இலக்கியம், சமூக நலம் மற்றும் விளையாட்டுக்களில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்ததமிழர்கள் இதில் இடம் பெறுவார்கள்.

அதேபோல, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாட்டு தமிழ் இலக்கியங்கள் அடங்கிய இலக்கியத் தொகுப்புஒன்றையும் சர்வதேச தமிழ் ஆய்வுக் கழகம் மூலம் வெளியிட அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்றார் தம்பிதுரை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+