மண்டபம்: பூசாரியிடம் லஞ்சம் கேட்ட அதிகாரி கைது

Subscribe to Oneindia Tamil

மண்டபம்:

கோவில் பூசாரியிடம் ரூ.10,000 லஞ்சம் வாங்க முயன்ற அறநிலையத்துறை அதிகாரியை போலீசார் கைதுசெய்தனர்.

ராமநாதபுரம் அருகே உள்ளது மண்டபம். இங்குள்ள காந்தி நகர் பகுதியில் அருள்மிகு களஞ்சியம் கோவில்உள்ளது.

இந்தக் கோவிலில் பூசாரியாக இருப்பவர் ஆறுமுகம். இவருக்கு சமீபத்தில் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர்நாகராஜன் என்பவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.


அந்தக் கடிதத்தில், இக்கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் வருவதால் அதை அரசு தன் வசம் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நேரில் சந்தித்து பேசவும் என்று கூறப்பட்டிருந்தது.

கடிதத்தால் குழம்பிப் போன ஆறுமுகம், இந்து நாகராஜனைச் சந்திக்க ராமநாதபுரம் கிளம்பிப் போனார்.

நாகராஜனை அவர் சந்தித்தபோது, கோவிலை அரசு வசம் ஒப்படைக்க வேண்டாம் என்று விரும்பினால் ரூ.10,000கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்காவிட்டால், கோவிலை அரசு வசம் எடுததுக் கொள்ள பரிந்துரை செய்துவிடுவேன் என்று ஆறுமுகத்திடம் நாகராஜன் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ந்து போன ஆறுமுகம், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். கூடுதல் டிஎஸ்.பி.ஞானசேகரன் உத்தரவின் பேரில் ஒரு போலீஸ் படை, ஆறுமுகத்திடம் சில குறிப்புகளைக் கொடுத்து விட்டுநாகராஜன் அலுவலகத்திற்கு சாதாரண உடையில் வந்தனர்.

போலீசாரின் ஆலோசனைப்படி ரூ.10,000 அடங்கிய பணக் கட்டை நாகராஜனிடம், ஆறுமுகம் கொடுத்தார்.அப்போது மறைவாக இருந்த போலீசார் நாகராஜனைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

பின்னர் நாகராஜனின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு ஆவணங்கள் மற்றும் ரூ.60,000ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நாகராஜன் பின்னர் காவலில் வைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+