""ஜெயலலிதாவும் மனுஷிதானே"": காளிமுத்து
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிமை மீறல் பிரச்சனை எழுப்பும் வகையில் எதையும் தவறாகப் பேசவில்லை என்றுசபாநாயகர் காளிமுத்து இன்று (வியாழக்கிழமை) சட்டசபையில் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காவிரி விவகாரத்தில் தவறான தகவல் கொடுத்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் நிதிஅமைச்சர் பொன்னையனுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வருவதற்கான கோரிக்கையை சபாநாயகர்காளிமுத்துவிடம் திமுக எம்.எல்.ஏக்கள் வழங்கினர்.
அவையின் பழைய கோப்புகளைப் படித்துவிட்டுத்தான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும் என்று காளிமுத்துகூறியிருந்தார்.
அதன்படி இன்று சட்டசபையில் காளிமுத்து பேசுகையில்,
ஒருவர் வேண்டுமென்றே தவறாக எதையாவது பேசினால்தான் அதுகுறித்து உரிமைப் பிரச்சனை எழுப்ப முடியும்.
ஆனால் ஜெயலலிதா தெரியாமல்தான் காவிரி விவகாரத்தில் கருணாநிதி குறித்துப் பேசிவிட்டார். வாய் தவறிபேசிவிட்டேன் என்று அவரே மறுநாள் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
தவறுகள் ஏற்படுவது மனித இயல்பு. ஜெயலலிதாவும் ஒரு மனுஷிதானே. எனவே ஜெயலலிதா உரிமைப் பிரச்சனைஎதுவும் மீறப்படவில்லை என்றார் காளிமுத்து.
காளிமுத்துவின் இந்த அறிவிப்பைக் கண்டித்து இன்று திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சர்க்காரியா கமிஷன் விவகாரத்தில் இருந்து தப்புவதற்காகத் தான் காவிரி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில்இருந்து கருணாநிதி வாபஸ் பெற்றார் என்று குற்றம் சாட்டிய ஜெயலலிதா, அந்தக் குற்றச்சாட்டைத் திரும்பப்பெறுவதாகவும் வாய் தவறி அப்படிப் பேசிவிட்டதாகவும் நேற்று கூறியிருந்தார்.
ஆனால், தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறிய ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுகருணாநிதியும் கூறியிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications