பிரபாகரனைப் பிடிக்க வாஜ்பாய்க்கு கடிதம் எழுதுகிறார் ஜெ.
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கைஎடுக்குமாறு கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு தான் கடிதம் எழுதப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று(வியாழக்கிழமை) கூறினார்.
ராஜிவ் காந்தி கொலையில் முக்கியக் குற்றவாளியான பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுஏற்கனவே இரு நாடுகளும் கூட்டாகக் கூறியுள்ளன.
எனவே அதன்படி இலங்கை அரசே முன்வந்து இந்தியாவிடம் பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு ஒப்படைக்க இலங்கை அரசு முடியாது என்று கூறினால், இந்திய ராணுவத்தினர் இலங்கைக்குச் சென்று,பிரபாகரனைப் பிடித்துக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசை வலியுறுத்துமாறு விரைவில் வாஜ்பாய்க்குக் கடிதம்எழுதவுள்ளேன்.
ஏற்கனவே கடந்த 1991ல் இதுபோலவே அப்போதைய பிரதமர் நரசிம்மராவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதன்தொடர்ச்சிதான் இந்தக் கடிதம்.
ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்துள்ள புலிகள் அமைப்பினர், இந்தியாவுக்குள் வந்து சுதந்திரமாகநடக்க விரும்புவது அதிர்ச்சியாக உள்ளது. காஷ்மீருக்குள் நுழைந்து மக்களைக் கொன்று குவிக்கும் பாகிஸ்தான்தீவிரவாதிகளுக்கும் புலிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தியாவுக்குள் - குறிப்பாக தமிழகத்துக்குள் - புலிகள் ஊடுருவ அனுமதிஅளிக்கக் கூடாது. இதுதான் என்னுடைய நிலை, எங்கள் அதிமுகவின் நிலையும் கூட என்றார் ஜெயலலிதா.
"புலிகளின் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தனக்கு சிகிச்சை அளிப்பதற்காகத்தானே இந்தியாவுக்குள்அனுமதி கேட்கிறார்" என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "உலகத்தில் எவ்வளவோ நல்ல மருத்துவமனைகள் உள்ளன,அங்கே அவர் தாராளமாகப் போகட்டுமே" என்று பதிலளித்தார் ஜெயலலிதா. மேலும், இதுகுறித்து மத்தியஅரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"நடந்ததை மறப்போம் என்று பிரபாகரன் கூறியுள்ளாரே?" என்ற மற்றொரு நிருபரின் கேள்விக்கு, "மறக்க,மன்னிக்க என்ற வார்த்தைகளுக்கே இடமில்லை" என்று பதிலளித்தார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications