காலையில் காதல் திருமணம், மாலையில் "குட்-பை"
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே காலையில் காதலனுடன் திருமணம் செய்த பிளஸ் டூ மாணவி ஒருவர், மாலையில்தன்னுடைய பெற்றோரைப் பார்த்ததும் மனம் மாறி, அவர்களுடனே சென்று விட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அருகே உள்ள இடையார்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவரின்மகள் ரம்யா (18), அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
ரம்யாவுக்கும் திலகராஜ் (26) என்ற தங்க ஆசாரிக்கும் காதல் ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு "ஓடிப்போய்", வடவள்ளியில் உள்ள பதிவுத் திருமணஅலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே கிருஷ்ணராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரம்யாவைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
போலீசார் தங்களைத் தேடுவதை அறிந்த திலகராஜ்-ரம்யா காதல் ஜோடி, துடியலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்புகுந்தனர்.
தகவலைக் கேள்விப்பட்டு ரம்யாவின் பெற்றோர் துடியலூருக்கு விரைந்து வந்தனர். அவர்களைப் பார்த்ததும்ரம்யா மனம் மாறினார்.
இதையடுத்து, தான் மருத்துவப் படிப்புக்காக நுழைவுத் தேர்வு எழுதவிருப்பதாகவும், மேலே படிக்கவிரும்புவதாகவும் போலீசாரிடம் ரம்யா கூறினார்.
அவருடைய காதலரான திலகராஜும், "ரம்யா மேல் படிப்பு படிக்கட்டும். அவருடைய பெற்றோர் கூடவே அவர்செல்லட்டும்" என்று கூறிவிட்டார்.
இதையடுத்து ரம்யாவின் பெற்றோர், அவரை சந்தோஷத்துடன் அழைத்துச் சென்றுவிட்டனர். "என்றைக்காவதுரம்யா என்னுடன் வாழ வருவாள்" என்று கூறி திலகராஜும் சோகத்துடன் வீடு திரும்பினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications