கோவை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை: 2 பேர் கைது
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரைப் போலீசார்இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.
கடந்த மார்ச் 28ம் தேதி கோயம்புத்தூர்-புதூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான முருகேசன் (35) படுகொலைசெய்யப்பட்டார். இதனால் கோயம்புத்தூர் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.
முருகேசன் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோயம்புத்தூரில் உள்ள மருந்துக் கடைஉரிமையாளரான சுல்தான் மீரான் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் முருகேசன் கொலைச் சம்பவம் தொடர்பாக அபு தாஹிர் மற்றும் ஷாஜகான் ஆகிய 2 பேரை இன்றுபோலீசார் கைது செய்தனர்.
சுல்தான் மீரான் கொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாகவே முருகேசனைத் தாங்கள் கொலைசெய்ததாக இந்த இரண்டு பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
முருகேசன் கொலையில் தொடர்புடைய மேலும் சிலரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சுல்தான் மீரான் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவருடைய நண்பர் ஒருவர் ஏற்கனவே சரணடைந்துவிட்டார் என்பதும் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications