பெண் எஸ்.ஐயிடம் ஆபாசமாக நடந்து கொண்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
விருதுநகர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறை அலுவலகத்தில் பணியாற்றி வரும்பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக அதே அலுவலகத்திலுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் அழகுராஜா, ஏற்கனவே ஒரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிவந்தபோது, அந்தக் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்வந்தது.
இதையடுத்து அழகுராஜா கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் இங்கு வந்த பிறகும் அவருடைய லீலைகள் தொடர்ந்தன. அங்கிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம்ஆபாசமாக நடந்து கொண்டார்.
கட்டுப்பாட்டு அறை அலுவலகத்திலும் அவர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளாமல் செய்த தவறையே மீண்டும்செய்ததால் அவரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி மகேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications