நாடகமாடும் பா.ஜ.க.: கடுப்பாகிப் போன நாயுடு
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளிடமே பாரதீய ஜனதா நாடகமாடஆரம்பித்துள்ளது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத மோடியால் இதுவரை குஜராத்தில் 1000க்கும் மேற்பட்ட உயிர்கள்பலியாகிவிட்டன. பா.ஜ.க., பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. ஆகிய கட்சிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களேநேரடியாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் போலீஸ் கைகட்டிநிற்கிறது. தொடர்ந்து இரு மதத்தினரும் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் அவரை உடனே நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஆனால், அவரை நீக்கமுடியாது என பா.ஜ.க. கூறி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. தலைவர்களின் நெருக்குதலால் தான்அவரை நீக்க பா.ஜ.க. மறுத்து வருகிறது.
இந் நிலையில் உடனடியாக மோடியை நீக்க வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கட்சியானதெலுங்கு தேசம் கூறிவிட்டது.
நாடகம் போட்ட பா.ஜ.க.:
இதை எதிர்பார்க்காத பா.ஜ.க. இப்போது புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.
கோவாவில் நடந்து வரும் பா.ஜ.க. தேசிய செயற்குழுவில் ஏற்கனவே திட்டமிட்ட நாடகத்தின்படி தான் ராஜினாமாசெய்வதாக நரேந்திர மோடி அறிவித்தார்.
இதையடுத்து அவரது ராஜினாமாவை ஏற்கப் போதில்லை என்று அறிவித்த பா.ஜ.க. செயற்குழு அதற்குப் பதிலாககுஜராத் சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு மோடி தேர்தலை சந்திக்கலாம் என்று அவரிடம் வலியுறுத்தியது.
இது தங்களுக்கு செக் வைக்க பா.ஜ.க. போட்டுள்ள நாடகம் இது என்று தெலுங்கு தேசம் கருதுகிறது. தேசியஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் இந்த ராஜினாமாவும் அதை நிராகரித்ததும் முழு நாடகம்என்று வெளிப்படையாகவே கூறிவிட்டது.
சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தால் தேர்தலின்போது மோடி தான் ஆட்சியில் இருப்பார். அவரதுமதவாதத்தன்மை தெள்ளத் தெளிவாகிவிட்டால் அவரது தலைமையிலான ஆட்சியில் தேர்தல் நடந்தால்வன்முறையில் மேலும் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும் என்பது நிச்சயம்.
மேலும் நேற்றைய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய், அத்வானிக்கும் மேலாக மோடி தான் ஹீரோ மாதிரிநடத்தப்பட்டார்.
அறிவுரை தான்... ஆர்டர் அல்ல:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய மோடி, சட்டசபையைக் கலைக்க வேண்டும் என்று கட்சி மேலிடம்எனக்கு அறிவுரை தான் கூறியுள்ளதே தவிர, ஆணையிடவில்லை என்றார்.
இதன்மூலம் தேர்தலை சந்திக்க அவரும் பா.ஜ.கவும் தயாராக இல்லை என்பது தெளிவாகிவிட்டது. தேசியஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றவே இந்த நாடகம் நடத்தப்படுவதும் தெளிவாகிவிட்டது.
இதனால் தெலுங்குதேசம் கடுப்படைந்துள்ளது. மோடியின் ராஜினாமவை ஏன் வாங்கக் கூடாது என்று கேட்டுள்ளதெலுங்குத் தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று தனது கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தை இன்றுஹைதராபாத்தில் கூட்டியுள்ளார்.
இக் கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் நாளை நடக்கிறது. பா.ஜ.க. எப்படி நடந்து கொள்கிறது எனபதை வைத்துஎந்தவிதமான கடுமையான முடிவையும் எடுக்க தெலுங்கு தேசத் தலைவர் முடிவெடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சோனியா கோபம்:
இந் நிலையில் அஸ்ஸாம் தலைநகர் கெளஹாத்தியில் நடந்து வரும் காங்கிரஸ் முதல்வர்கள் கூட்டத்தில் பேசியகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற மரியாதையையே குஜராத் வன்முறை கெடுத்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சிசெய்யும் 14 மாநிலங்களிலும் வன்முறை நடக்காமல் இருக்கும்போது பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலத்தில் மட்டும்ஏன் வன்முறை நடக்கிறது. ஓட்டு வாங்குவதற்காக அரசே இந்த வன்முறையைத் தூணடிவிட்டு வருகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications