புலிகளை ஆதரித்தால்... வைகோவுக்கு ஜெ. எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் "பொடா" சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் நிருபர்களிடம் பேசியதாவது:

இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா தலையிடாது என்று பிரதமர் வாஜ்பாய் கூறியிருப்பதுவரவேற்கத்தக்கது.

ஆனால் மனிதாபிமான அடிப்படையில் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்துக்குஇந்தியாவில் சிகிச்சை அளிக்க அனுமதிப்பது பற்றி பரிசீலிக்கப் போவதாக வாஜ்பாய் கூறுவதை நான் கடுமையாகஎதிர்க்கிறேன்.

எக்காரணத்தைக் கொண்டும் பாலசிங்கத்தையோ வேறு எந்தப் புலிகளையோ இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது.ஒருவேளை அவரை மத்திய அரசு அனுமதித்தாலும் தமிழகத்துக்குள் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மாநில அரசின் கையில்தான் உள்ளது. பொது அமைதியையும் பாதுகாப்பையும்நிலைநாட்ட என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது.

தமிழகத்தில் மதிமுக, பாமக போன்ற கட்சிகள் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றன. இவற்றின் தலைவர்கள்மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புலிகளை ஆதரிப்பதன் மூலம் இவர்கள் தேச விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

புலிகள் இயக்கத்தின் மீதான தடை வரும் மே 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை நீட்டிக்க வேண்டும் என்றுகோரி நான் பிரதமருக்கு கடந்த 10ம் தேதி கடிதம் எழுதியுள்ளேன் என்றார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+