நாளை பிறக்கிறது "சித்திரபானு": தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
"சித்திரபானு" ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிறப்பதையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டதலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
"விஷு" ஆண்டு முடிந்து நாளை "சித்திரபானு" ஆண்டு பிறக்கிறது. இந்தத் தமிழ்ப் புத்தாண்டை தமிழகம் மட்டுமன்றிஉலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடவுள்ளனர்.
"சித்திரபானு" ஆண்டை முன்னிட்டு ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தப் புத்தாண்டில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறும்.
தமிழ் மக்கள் அனைவரும் இனிமையுடனும் நிறைவுடனும் இந்தப் புத்தாண்டைக் கொண்டாட அன்பானவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல் திமுக தலைவர் கருணாநிதி, இந்தப் புத்தாண்டில் புதிய வரலாறு பூத்துக் குலுங்கட்டும் என்றுவாழ்த்தியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் கிருபாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழககாங்கிரஸ் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி உள்பட பல தலைவர்களும் "சித்திரபானு" வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் மற்றும் பிரதமர் வாஜ்பாய், தமிழக ஆளுநர்ராமமோகன் ராவ் ஆகியோரும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தமிழ் மக்களுக்காக கூறியுள்ளனர்.
காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள், தான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த"சித்திரபானு" ஆண்டில் அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications