பாலசிங்கத்தை இந்தியாவில் அனுமதித்தால் வழக்கு போடுவேன்: சுவாமி
சென்னை:
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தை இந்தியாவில் தங்க அனுமதித்தால் அதைஎதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன் என்று ஜனதா கட்சித் தலைவரான சுப்ரமணியம் சுவாமி இன்று(சனிக்கிழமை) கூறினார்.
இதுகுறித்து சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புலிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறிய கருத்துக்களை வரவேற்கிறேன்.
பாலசிங்கத்தை இந்தியாவில் தங்க எந்தவிதத்திலும் அனுமதியே அளிக்கக் கூடாது. அவ்வாறு தங்க அனுமதிப்பதுபொடா சட்டத்திற்கு எதிரானதாகும்.
எனவே பாலசிங்கத்தை இந்தியாவில் தங்க அனுமதித்தால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் நான் வழக்குதொடர்வேன்.
புலிகளுக்கு எதிராக தமிழக அரசு வரும் 16ம் தேதி கொண்டு வரும் தீர்மானத்தை திமுக தலைவரானகருணாநிதியும் ஆதரிக்க வேண்டும் என்று சுவாமி கூறினார்.
புலிகளுக்கு ஆதரவாக மதச் சார்பற்ற ஜனதா தளம்:
இதற்கிடையே புலிகளின் கோரிக்கையை ஏற்று அமைதிப் பேச்சுவார்த்தை விஷயத்தில் இந்தியா தலையிடவேண்டும் என்று மதச் சார்பற்ற ஜனதா தளம் கேட்டுக் கொண்டுள்ளது.அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவரான ஜி.ஏ. வடிவேலு இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
அண்டை நாடான பாகிஸ்தானிடம் தொடர்ந்து மிரட்டல்களைச் சந்தித்து வரும் இந்தியா, மற்றொரு அண்டைநாட்டிலிருந்து நட்புக் கரம் நீட்டும் புலிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழர்கள் பெரும் போராட்டமே நடத்தி வரும் இலங்கையில் தற்போது அமைதி திரும்பும்சூழ்நிலை உருவாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஆகியோர் புலிகளுக்கு நிதி உதவிசெய்துள்ளனர். புலிகள் ஒன்றும் தீண்டத் தகாதவர்கள் கிடையாது.
மகாத்மா காந்தியைக் கொன்றவன் ஒரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் அப்போது தடைசெய்யப்பட்ட அந்த இயக்கம், பின்னர் மீண்டும் தடை நீக்கம் பெற்றது.
எனவே புலிகளின் மீதான தடையை விலக்கி இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றிபெற இந்தியா உதவவேண்டும் என்று வடிவேலு கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications