சென்னையில் நடு ரோட்டில் தீப் பிடித்து எரிந்த பஸ்
சென்னை:
சென்னை வேளச்சேரி பஸ் நிலையப் பகுதியில் மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
வேளச்சேரி விஜயநகர் பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. தாம்பரத்திலிருந்து தி.நகர் செல்லும் 5 ஏ பஸ் காலை 10 மணியளவில் பஸ்நிலையத்திற்கு வந்தது. அப்போது திடீரென டிரைவர் மதுரைமுத்துவின் சீட்டுக்குக் கீழே தீப்பிடித்துக் கொண்டது.
இதைப் பார்த்த டிரைவர் உடனடியாக தீ... தீ என்று கத்திக் கொண்டு பஸ்ஸை விட்டுக் குதித்தார். பயணிகளும் அடித்துப் பிடித்துக் கொண்டுஇறங்கி ஓடினர்.
அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ் முழுவதுமாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. பஸ் எரிவதைப் பார்த்த அப்பகுதி மக்கள்கைகளில் கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரைப் பிடித்து வந்து பஸ் மீது ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
தீயணைப்பு படைக்கும் தகவல் தந்தனர். இதையடுத்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. பஸ்சின் டீசல் டேங்க் வரை வந்து விட்டதீயை வீரர்கள் உடனடியாக அணைத்து விட்டனர்.
இதனால் பஸ் வெடித்துச் சிதறாமல் தப்பியது. டீசல் டேங்க் வெடித்திருந்தால் அங்கு மிகப் பெரிய விபத்து ஏற்ப்பட்டிருக்கும்.
பின்னர் எரிந்து போன பஸ் சைதாப்பேட்டை சின்னமலை பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பஸ்சின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications