தென் கொரியாவில் விமானம் விழுந்து 109 பேர் பலி
சியோல்:
சீனாவுக்குச் சொந்தமான ஏர் சீனா போயிங் 767 என்ற விமானம் தென் கொரியாவில் இன்று (திங்கள்கிழமை)காலை விழுந்து நொறுங்கியதில் 109 பேர் உயிரிழந்தனர்.
சீன தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து தென் கொரியாவின் புசன் நகருக்குச் சென்று கொண்டிருந்த இந்த சிஏ129 ரகவிமானம், மற்றொரு தென் கொரிய நகரமான ஜிம்ஹேவில் மக்கள் வசிக்கும் பகுதியில் இன்று காலை 7.50 மணிக்கு(இந்திய நேரப்படி) விழுந்து நொறுங்கியது.
விழுந்த வேகத்தில் அந்த விமானம் சுக்கு நூறாகச் சிதறி விட்டதாக விபத்தை நேரில் பார்த்த சிலர் கூறினர்.
விமானத்திலிருந்த 155 பயணிகள் மற்றும் 11 விமானச் சிப்பந்திகள் அனைவருமே உயிரிழந்து விட்டதாக முதலில்அஞ்சப்பட்டது.
ஆனால் 109 பேர் மட்டுமே இறந்து விட்டதாகவும் 47 பேர் படுகாயங்களுடன் காப்பற்றப்பட்டதாகவும்அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் 10 பேரின் உடல் கிடைக்கவில்லை.
மழை காரணமாக ரோடுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள்நடந்து வருகின்றன. ஆனாலும் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் மீட்புப் பணியில் துவக்கத்தில் பெரிதும் தாமதம்ஏற்பட்டது.
மோசமான வானிலை காரணமாக முதல் முறை தரையிறங்க முயற்சித்தபோதே ஏகப்பட்ட இடர்ப்பாடுகள்தோன்றியதாகவும், பின்னர் வானில் ஒருமுறை வட்டமடித்து விட்டு 2வது முறையாகத் தரையிறங்க முயற்சிசெய்தபோதுதான் அருகிலிருந்த ஒரு மலையில் மோதி இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக புசன் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications