சென்னையில் மீண்டும் கொள்ளை
சென்னை:
சென்னையில் கொலை-கொள்ளைகள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நேற்றும்(ஞாயிற்றுக்கிழமை) நடந்த இரட்டைக் கொள்ளை மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை-திருவான்மியூரில் வசிக்கும் ராமசாமி, தி. நகரில் உள்ள கனரா வங்கியின் மானேஜராகப் பணிபுரிந்துவருகிறார்.
ஐதீக வழிபாடுகளில் நிறைய நம்பிக்கை உள்ள ராமசாமி குடும்பத்தினர், ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டுக்கும்முந்தைய தினம் நள்ளிரவில் "கனிகாணல்" என்ற விசேஷ பூஜை செய்வது வழக்கம்.
இந்தப் பூஜையின்போது, குருவாயூரப்பன் சுவாமிப் படத்தின் முன் பழங்கள் மற்றும் நவதானியங்கள் தவிரநகை-பணம் ஆகியவற்றையும் வைத்து வழிபடுவது அவர்கள் வழக்கம்.
பின்னர் அப்படியே அவற்றை விட்டுவிட்டு தூங்கச் செல்லும் அவர்கள், மறுநாள் காலையில் அந்தப் பூஜைப்பொருட்கள் மீது கண் விழிப்பார்கள்.
அதன்படி நேற்று காலை தூங்கி எழுந்து வந்து பார்த்த ராமசாமியின் மனைவி அதிர்ச்சியடைந்தார். பூஜைக்காகவைத்திருந்த தங்க-வைர நகைகள் மற்றும் பணம் ஆகிய அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
அருகில் உள்ள மற்றொரு அறையிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட ராமசாமி மேலும் அதிர்ந்துபோனார். அதிலிருந்தும் நகை-பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தன.
அந்த அறையில் உள்ள ஜன்னலை உடைத்துக் கொண்டுதான் கொள்ளையர்கள் நுழைந்திருப்பது தெரிய வந்தது.ஜன்னலை உடைப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய ஸ்குரூ டிரைவர், சுத்தியல் போன்றவற்றை அங்கேயே விட்டுச்சென்றுவிட்டனர்.
கொள்ளை போன பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கொள்ளையர்களின் கைரேகையைப் பதிவு செய்துள்ள திருவான்மியூர் போலீசார், தனிப்படை அமைத்துஅவர்களைத் தேடி வருகின்றனர்.
எழும்பூரிலும் கொள்ளை
இதற்கிடையே சென்னை-எழும்பூரிலும் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்து நகை, பணம்மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
எழும்பூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே சென்னையில் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்தவாரம்தான் அடையாறில் உள்ள ஸ்டேட் வங்கியில் பட்டப் பகலில் புகுந்த கொள்ளையர்கள், அந்த வங்கியின்அதிகாரி ஒருவரைக் கொலை செய்துவி"ட்டு கொள்ளையடிக்க முயற்சித்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications