இப்போதைக்கு ஆதரவு வாபஸ் இல்லை: நாயுடு
ஐதராபாத்:
மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவை இப்போதைக்கு வாபஸ் பெறப் போவதில்லை என்று தெலுங்குதேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு கூறியதையடுத்து, வாஜ்பாய் அரசுக்கு ஏற்படவிருந்த ஆபத்துதற்போதைக்கு நீங்கியுள்ளது.
நேற்று காலையில் நடந்த தெலுங்கு தேசக் கட்சியின் கூட்டத்தில், குஜராத் முதல்வர் மோடியை நீக்காவிட்டால்மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பின்னர் நேற்று மாலை இக்கட்சியின் மேலிடக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அதற்கு முன்னதாகவே தேசியஜனநாயகக் கூட்டணியில் உள்ள பல கட்சித் தலைவர்களுடன் பேசிய நாயுடு, பாஜகவுக்கு எதிராக கோஷ்டிஉருவாக்க முயற்சி செய்தார்.
ஆனால் நாயுடுவுக்கு ஆதரவு தர பல தலைவர்களும் மறுத்து விட்டனர். இதையடுத்து மத்திய அரசுக்கான ஆதரவைவாபஸ் பெறப் போவதில்லை என்று நாயுடு அறிவித்து விட்டார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிஅளவில் இந்த அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து வாஜ்பாய் அரசு தப்பியதாகக் கருதப்பட்டாலும், இன்று 3வது முறையாகக் கூடவுள்ளநாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில், மோடி பிரச்சனையை மீண்டும் கிளப்பப் போவதாக தெலுங்குதேசம் அறிவித்துள்ளது.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் இன்று மோடி விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications