மகளையே மானபங்கம் செய்ய முயன்ற ஐ.ஐ.டி. பேராசிரியர்
சென்னை:
சொந்த மகளையே மானபங்கம் செய்ய முயன்ற ஐ.ஐ.டி. முன்னாள் பேரசிரியர் கைது செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்தவர் ஜெய் பிரகாஷ் மல்ஹோத்ரா. காரக்பூர் ஐ.ஐ.டியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பேராசிரியராகப்பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
அரசின் வேண்டுகோளை ஏற்று மெரீனா கடற்கரையில், ஒரு ஆய்வு நிலையத்தை அமைத்து, கடலிலிருந்து தங்கம் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
இந் நிலையில், ஜெய்பிரகாஷின் மனைவி போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில் தனது 11 வயது மகள் குளித்துக் கொண்டிருந்தபோது அவரை ஜெய் பிரகாஷ் மானபங்கம் செய்ய முயன்றதாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து விஞ்ஞானி ஜெய் பிரகாஷை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மானபங்கம் செய்தல், கிரிமினல் நடவடிக்கையில்இறங்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2ம் தேதியே அவர் கைது செய்யப்பட்டுவிட்டார். ஆனால், ஒரு பேராசிரியர் இந்த செயலில் இறங்கியது ஐ.ஐ.டியின் பெயரையேகெடுத்துவிடும் என்பதால் அதை வெளியில் சொல்லாமல் மறைத்துவிட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இப்போது இந்த விவரம் வெளியில் தெரிந்துவிட்டது. நேற்று 15 நாள் ரிமாண்ட் முடிந்து நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை மீண்டும் சிறையில் தள்ள நீதிமன்றம உத்தரவிட்டது. இதையடுத்து இப்போது அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications