பா.ஜ.க: வெளியிலே புலி... உள்ளே எலி...

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மதக் கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் அதை மறைமுகமாகத் தூண்டிவிட்டு வரும் குஜராத் பா.ஜ.க. முதல்வர்நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்பதில் தெலுங்கு தேசம் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

இரண்டாவது நாளாக இன்றும் எதிர்க் கட்சிகளும் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் சிலவும் செய்த அமளியால்நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது. அவை ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த வைத்து மத்திய அரசுக்கு போதிய மெஜாரிட்டி இல்லைஎன்பதை வெளிக்காட்ட காங்கிரஸ் முயன்று வருகிறது.

இதற்காக தனது பகையை மறந்து நேற்று சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை சோனியா காந்திஅழைத்துப் பேசினார். முன்னதாக நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனையைக் கிளப்பிய முலாயமுக்கு ஆதரவாகபேசுமாறு தனது கட்சியினருக்கு சோனியா உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தெலுங்கு தேசமும் எதிர்க் கட்சிகள் வரிசையில் சேர்ந்துவிட நாடாளுமன்றத்தை நடத்த முடியாதஅளவுக்கு அமளி ஏற்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று இரவும் சோனியா காந்தியும் முலாயம்சிங் யாதவும் மோடி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

வாஜ்பாயின் தூதர்...

இந் நிலையில் அரசுக்குத் தந்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுவிட வேண்டாம் கோரி பிரதமரின் வாஜ்பாயின்சிறப்புத் தூதராக பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் நேற்று ரகசியமாய் ஹைதராபாத் வந்தார்.

அவர் முதல்வர் சந்திரபாபு நாயுவைச் சந்தித்து பிரதமரின் இக் கோரிக்கையை முன் வைத்தார்.

ஆனால், மதக் கலவரத்தை ஒரு அரசே நடத்தி வரும் நிலையில் அதை ஆதரிக்க முடியாது என நாயுடுகூறிவிட்டதாகத் தெரிகிறது.

வெளியில் புலி... உள்ளே எலி..

இந் நிலையில் நாடாளுமன்றத்தில் மோடி விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் எனஎதிர்க் கட்சிகள் ஒற்றைக் காலில் நிற்கின்றன. இவர்ரளுக்கு பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம்தவிர திரிணமூல் காங்கிஸ், லோக் ஜன் சக்தி ஆகியவையும் ஆதரவு தந்துள்ளன.

எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் மெஜாரிட்டியை நிரூபிப்போம் என்று கூறி வந்த பா.ஜ.க.இந்தக் கோரிக்கையை ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறது.

பா.ஜ.க. கூட்டம்:

இந் நிலையில் பா.ஜ.கவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் அவசரமாக நடந்தது. அதில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையான ஓட்டெடுப்பை நிராகரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மல்ஹோத்ரா இன்று நிருபர்களிடம் பேசுகையில், மோடி குறித்துநாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால், ஓட்டெடுப்புக்கு எல்லாம் தயார் இல்லைஎன்றார்.

இதனால் வெளியில் மிக தைரியமாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் பா.ஜ.க. தலைவர்கள் உள்ளேபயந்துபோய்இருப்பது தெரியவருகிறது. ஓட்டெடுப்பில் தெலுங்கு தேசம், திரிணமூல், லோக் ஜன் சக்தி எதிர்த்துவாக்களித்தால் மத்திய அரசு தோற்கும்.

அதன் பின்னர் ஆட்சியில் தொடர்வது பா.ஜ.கவுக்கு மிக அசிங்கமாக இருக்கும். இதனால் தான் ஓட்டெடுப்பைதவிர்த்து வருகிறது.

குஜராத்தில் வன்முறையை வைத்தே ஆதாயம் தேடி விட அக் கட்சி நினைப்பதால் தான் இப்போது தேர்தல் நடத்தமுண்டியடித்துக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+