தீர்மானத்தை எதிர்த்து கறுப்பு சட்டையுடன் வந்த பா.ம.க. எம்.எல்.ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபாகரைனப் பிடிக்கக் கோரும் தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வாக்களித்தது. இந்தத்தீர்மானத்தைக் கண்டித்து அக் கட்சியின் எம்.எல்.ஏக்கள் இன்று கருப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

தீர்மானத்தை ஜெயலலிதா படித்து முடித்தவுடன் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டசபைத் தலைவர் ஜி.கே.மணி,

இந்தத் தீர்மானம் உள்நோக்கம் கொண்டது. தமிழர்களின் நலனுக்கு எதிரானது. இந்தத் தீர்மானத்தை வன்மையாகஎதிர்க்கிறோம் என்றார்.

பின்னர் இதன் மீது நடந்த குரல் வாக்கெடுப்பின்போது அதை எதிர்க்கிறோம் என்று பா.ம.க. எம்.எல்.ஏக்கள் குரல்கொடுத்துவிட்டு அவையைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

வெளியில் நிருபர்களிடம் பேசிய மணி,

இந்த விவகாரத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் வாழ்வில்நிம்மதி திரும்பும் நல்ல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தத் தீர்மானம் அதைக் கெடுக்கும் வகையில்அமைந்துள்ளது என்றார்.

கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு:

இந்தத் தீர்மானத்தில் பிரபாகரனைப் பிடிக்க இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததைஎதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அதன் தலைவர் பழனிச்சாமி தலைமையிலும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அதன் தலைவர் பிரேமச்சந்திரன் தலைமையிலும் வெளிநடப்பு செய்தனர்.

ராணுவத்தை அனுப்புவோம் என்று கூறுவது அண்டை நாட்டின் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவதற்குசமமானது என அவர்கள் தெரிவித்தனர்.

பா.ஜ.கவும் எதிர்ப்பு:

பா.ஜ.க. உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. இக் கட்சியின் சட்டமன்றத் தலைவர் ராஜாகூறுகையில்,

இந்தத் தீர்மானத்தின் கூறப்பட்டுள்ள அனைத்தையும் ஏற்கிறோம். ஆனால், ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றகோரிக்கையை ஏற்க முடியாது. அதை நீக்கக் கோரினோம். முடியாது என்று கூறிவிட்டார்கள். இதனால், இத்தீர்மானத்தை அப்படியே ஏற்க முடியாது என்று கூறிவிட்டோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+